தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில், பாகற்காய் சாறுடன் சம அளவு வெந்தயப் பொடி சேர்த்து உண்டு வரலாம். இதனால் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும்.
சிந்தில் கொடி இலை, வேப்பிலை, ஆவாரம்பூ, கோவைக்காய், வல்லாரை, சிறுகுறிஞ்சான் இலை, இன்சுலின் இலை உள்ளிட்டவையும் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வரும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை தினசரி உட்கொள்ள வேண்டும். உணவை ஒரே வேளையில் அதிகமாக உண்ணாமல், சீரான இடைவெளியில் பிரித்துப் பிரித்து உண்ண வேண்டும். கீரைகள், முளைவிட்ட தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் சர்க்கரை நோய், கட்டுக்குள் இருக்கும்.
Leave a Reply