அமேசான் காடு ஒரு பக்கம் எரிந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் அதில் நடக்கும் ஆராய்ச்சிகளுக்கும் குறைவில்லை. அங்கிருக்கும் பல்லுயிர்கள் பற்றிய வியப்புகள் அறிவியலுக்கே எட்டாக்கனியாக இருந்து வருகிறது. அப்படியான வியப்பும்தான் இது.
ஆம்; இப்போது இரண்டு வகையிலான விலாங்கு மீன்களைக் கண்டு பிடித்துள்ளனர். அதில் ஒன்று 860 வோல்ட்ஸ் மின்சாரத்தை வெளியிடும் திறன் வாய்ந்தது. உலகிலேயே அதிகளவில் மின்சாரத்தை வெளியிடும் உயிரினம் இதுதான். இதன் டி.என்.ஏ.வை ஆராய்ச்சி செய்ததில், சுமார் 70 லட்சம் ஆண்டுகளாக இந்த மீன் பூமியில் வாழ்ந்து வரலாம் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள். இந்த ஆய்வை முன்னின்று நடத்தியவர் உயிரியல் வல்லுநரான சி டேவிட் டே சண்டானா. சில வருங்களுக்கு முன் மின்சாரத்தை வெளியிடும் விலாங்கு மீனை அடையாளம் கண்டனர். ஆனால், அதன் திறன் 650 வோல்ட்ஸ் மட்டுமே.