ஆசிரியர் பதில்கள் : இராகுல் காந்தி விலகல் ஒரு சர்ஜிகல் ஆபரேஷன்

ஜூலை 16-31 2019

கே:       வடமாநிலங்களில் பெரியார் கொள்கைகள் பரப்பப்பட்டால் மட்டுமே பா.ஜ.க.வின் பாசிசத்திற்கு முடிவு கிடைக்கும் என்பதால் அதற்கான திட்டங்கள் என்ன?

                – முகமது, மாதவரம்

ராகுல் காந்தி

ப:           வடமாநிலங்களில் என்ன? அகில இந்திய அளவில் பெரியார்தான் ஒரே தடுப்பணை _ மாமருந்து என்பதால் அப்பணியைத் தீவிரமாகச் செய்ய மதிப்பிற்குரிய ராகுல் காந்தி போன்றவர்களே முன்வருவது நன்னம்பிக்கைக்கான அறிகுறியாகும்!

கே:       மதச்சார்பற்ற அரசின் இலச்சனையாக கோபுரம் இருப்பது ஏன்? அதை மாற்ற என்ன செய்ய வேண்டும்?

– இரா.பிரபாகரன், சென்னை

ப:           அதற்கான முயற்சி வெகுகாலத்திற்கு முன்பே ஓமாந்தூரார் முதல்வராக இருந்த 1947_48 காலத்தில் முயன்றதுண்டு. கோபுரம் கலைவடிவம் என்று ஏதோ ஒரு வியாக்யானத்தைக் கூறி நிலைக்க வைத்துவிட்டனர். உங்கள் கேள்வியில் உள்ள நியாயம் மறுக்கமுடியாத ஒன்று.

கே:       கடவுளுக்கும் சக்தியில்லை, யாகத்திற்கும் சக்தியில்லை என்று அப்பட்டமாகத் தெரிந்த பின்பும், அத்திவரதர் ஆர்ப்பாட்டங்கள் அடுத்தடுத்து அணிவகுப்பது மந்தை மனப்பான்மையாலா?

                – க.ல.சங்கத்தமிழன், செங்கை

ப:           பார்ப்பனருக்கு ஆன வருவாய்த்துறை! புது பிசினஸ் _ முதல் போடா பக்தி வியாபாரம்!

கே:       அறிவியல் மேதைகள் ஆன்மிகவாதிகளாய் இருப்பது எதைக் காட்டுகிறது?

                – க.தியாகராசன், நெய்வேலி

ப:           முட்டாள்தனம் எல்லோரது பொதுச் சொத்து _ பொது குணம் என்பதைக் காட்டுகிறது!

கே:       தமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர் பதவிக்கு தாழ்த்தப்பட்டோருக்கு 7 இடங்கள். தற்போது ஆறு இடங்களே தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்டன. எஞ்சிய ஓர் இடம் என்னவாயிற்று?

                – ரெ.மகாலிங்கம், கூடுவாஞ்சேரி

ப:           குடும்பக் கட்டுப்பாட்டில் வெற்றியடைந்த மாநிலங்களுக்கு இத்தகைய தண்டனை யதார்த்தமாக உள்ளது!

கே:       ஒரே நேஷன்! ஒரே ரேஷன்! மாநில உரிமைகள் மட்டுமல்ல, மாநிலங்களும் இல்லாமல் ஒழிப்பதற்கான சதிதானே! தீர்வு என்ன?

                – மகிழ், சைதை

ப:           இதிலென்ன சந்தேகம்? பொறுத்திருந்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் ஒரே வழி!

நிர்மலா சீதாராமன்

கே:       மத்திய பட்ஜெட் பற்றித் தங்கள் கருத்து என்ன?

– சீனிவாசன், மயிலாப்பூர்

 

ப:           பன்னீருக்குப் பதில் கானல் நீர்! வெகுமக்களுக்கு வெகுதூரம் உள்ள பட்ஜெட்!

கே:       ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யை எதிர்ப்பதில் உறுதியும் தீவிரமும் காட்டும் இராகுல் காந்தி தலைமைப் பதவியிலிருந்து விலகுவது எதிரிகளுக்கு சாதகமாகாதா?

                – ஸ்டீபன், போரூர்

ப:           தலைமைப் பதவியிலிருந்துதான் அப்பணி செய்ய வேண்டும் என்பதில்லை. அவருக்குள்ள தகுதியினால் அதை வெற்றிகரமாக அவரால் செய்ய முடியும். எதிரிகளுக்கு சாதகமாக அது ஒரு போதும் ஆகாது. இது ஒரு சர்ஜிகல் ஆபரேஷன் _ காங்கிரசுக்கு!

தந்தை பெரியார்

கே:       ஆர்.எஸ்.எஸ். ஆக்டோபஸ் பகத்சிங்கையும் பற்றியுள்ளதே! பெரியாரையும் பற்றுவார்களோ?

                – மாசிலாமணி, வேலூர்

ப:           எரிமலையிடம் எந்தக் குப்பையும் நெருங்க முடியாது!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *