வாஷிங்டனிலுள்ள அமெரிக்க காங்கிரஸ் நூலகத்தில் எட்டு கோடி புத்தகங்கள் உள்ளன. 26 ஹெக்டேர் பரப்புள்ள இந்நூலகத்தின் ஷெல்புகளை நீளவாக்கில் வரிசைப்படுத்தினால் 850 கி.மீ செல்லும்
******
ஒரு சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர் அளவுக்கு உமிழ்நீர் சுரக்கிறது என மருத்துவ விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர்.
******
அல்பட்ராஸ் பறவையால் பறக்கும் கோதே தூங்க முடியும். அதுவும் 40 கி.மீ வேகத்தில் பறந்தாலும்கூட எந்தப் பிரச்னையும் இல்லாமல் அவற்றால் தூங்க முடியும்.
******
ரத்த வங்கிகளில் ரத்தம் சேகரிக்கும் முறையை 1936ஆம் ஆண்டு பார்சிலோனா நகர் ரத்த வங்கிகியில் டாக்டர் நர்மன் பெத்யுன் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.
******
அமெரிக்காவின் ஜனாதிபதி மாளிகையை ‘வெள்ளை மாளிகை’ என்று அழைப்பர். இன்னொரு வெள்ளை மாளிகையும் உண்டு. அது மேற்கு ஜெர்மன் அதிபரின் மாளிகை ஆகும்.