ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள இம்னியன் பஸ் டெர்மினல் ஆசியாவிலேயே மிகப் பெரிய பேருந்து நிலையம். இதில் 39 பிளாட்பாரங்கள் உள்ளன. இது 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
******
இஸ்ரேல் நாட்டில் தீயில் எரியாத டமாரிங்கிரப் எனப்படும் ஒருவகை மரம் உள்ளது. இதில் அடங்கியுள்ள உலோகப் பொருள் சேர்க்கைதான் அதை எரியாமல் செய்கிறது. இந்த மரம் இரவில் சொட்டுச் சொட்டாக உப்பு நீரை வெளியிடுகிறது.
******
ஜெர்மனியில் ஓடும் நெமல்ஸ்டாபர் என்ற ஏரியில் நீரின் மேற்பகுதியில் இனிப்பாகவும் அதன் அடிப்பகுதியில் கசப்பாகவும் உள்ளது.
******
கடலில் வாழும் ‘க்ளோப் பிஷ்’ எனும் ஒரு வகை மின் எதிரிகளைக் கண்டவுடன் வயிறு நிறைய தண்ணீரைக் கடித்து குண்டாகிவிடும். இவ்வாறு இம்மீன் புட்பால்போல் ஆகிவிட்டால் இதை விழுங்க முடியாமல் எதிரிகள் ஓடிவிடும்.