ஒவ்வொரு துளி கடல் நீரிலும் (நடுக்கடலின் ஆழ்பகுதியில்) சுமார் நூறு கோடி தங்க அணுக்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர்.
******
நீர் யானை பார்ப்பதற்கு குண்டாக அசைவதற்கே சிரமப்படும் விலங்கு போலத் தொன்றினாலும் இதனால் மனிதனைவிட வேகமாக ஓட முடியும்.
******
பூமிக்கும் புதனுக்கும் இடைப்பட்ட தூரம் 21லு கோடி கிலோ மீட்டர். சுழற்சியின்போது பூமிக்கு மிக நெருங்கி வருவது உண்டு. அப்போது சுமார் 8 கோடி கிலோ மீட்டர் தூரமாக இருக்கும்.
******
போலந்தின் பால்டிக் போர்ட்டில் உள்ள ஓர் உயிரியல் பூங்காவில் வெள்ளை பென்குயின் ஒன்று முதல் முறையாக மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. ‘அல்பினோ’ எனும் தோல் நிற குறைபாட்டுடன் கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இந்தப் பென்குயின் பிறந்தது. அதனால்தான் அது வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கிறது.
இவ்வகையான பென்குயின்கள் அரிதிலும் அரிதானது. “உலகத்திலேயே வெள்ளை நிற பென்குயின் இது மட்டும்தான்…’’ என்கிறார்கள் உயிரியல் ஆய்வாளர்கள். சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருக்கும் இந்தப் பென்குயின் கொஞ்ச நாட்களுக்குத்தான் உயிரோடு இருக்கும் என்ற தகவல் பலரை நிலைகுலைய வைத்துள்ளது.