தகவல்

ஜுலை 01-15 2019

ஒரு வரிச் செய்திகள்

கலிபோர்னியாவில்தான் முதன்முதலில் ஜீன்ஸ் ஆடை தயாரிக்கப்பட்டது.

நோபல் பரிசு வென்ற முதல் பெண்மணி, மேரி க்யூரி.

கிளியைவிட மனிதர்கள் போன்று அதிகம் பேசக்கூடிய பறவை, மைனா.

பெருங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், இஸ்ரோ 1969ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தற்போது 16,000 ஊழியர்கள் இஸ்ரோவில் பணியாற்றுகின்றனர்.

வண்ணத்தேநீர்

பங்காளதேஷ் நாட்டின் மௌல்வி பஜார் மாவட்டத்தைச் சேர்ந்தவர், ரோமேஷ் ராம் கௌர். இவர், 7 வண்ணங்களில் வெவ்வேறு சுவை அளிக்கும் தேநீர் தயாரிப்பதில் பிரபலமானவர். இந்தத் தேநீரை சுற்றியுள்ள ஊர்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் தேடிவந்து சுவைப்பார்கள். இதனால், மௌல்வி பஜார் மாவட்டத்தை தேநீர்களின் தலைநகர் என்று அழைக்கிறார்கள்.

 

தினமும் காலையில் கண் விழித்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். இது, உடல் சூட்டை வெளியேற்றி கழிவுகள் அகல உதவும். பின்னர், இரவு தூங்கச்செல்லும் வரை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் அருந்துவது முக்கியம்.

 

வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில், நாட்டுச் சர்க்கரை, பனைவெல்லாம், பனங்கற்கண்டு, தேன் போன்றவற்றை பழகிக்கொள்ளுங்கள், சாக்லேட், சிப்ஸ் தவிர்ப்பது, கடலைமிட்டாய், எள்ளுருண்டை எனச் சாப்பிடலாம்.

 

ஏ.டி.ஹெச்.டி பிரச்னைக்குத் தீர்வு காணும் குங்குமப்பூ!

ஏ.டி.ஹெச்.டி (ADHD) எனப்படும் அட்டென்ஷன் டெஃபிசி ஹைபர் ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர் (Attention Deficit Hyperactivity Disorder) குறைபாட்டை குணப்படுத்த குங்குமப்பூவைப் பயன்படுத்தலாம் என்று கண்டுபிடித்திருக்கிற டெஹ்ரான் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.

குழந்தைகள் வளரிளம் பருவத்தினர் மத்தியில் பொதுவாகக் காணப்படும் ஏ.டி.ஹெச்.டி, ஒரு நரம்பியல் உளவியல் குறைபாடு. இதைக் குணப்படுத்த பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்துகளுக்கு இணையாகக் குங்குமப்பூவும் அதன் அறிகுறைகளைக் கட்டுப்படுத்துவதாக இந்தப் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. இதற்குக் காரணம், குங்குமப்பூவில் மனச்சோர்வைக் கட்டுப்படுத்தும், நினைவாற்றலை மேம்படுத்தும் குணங்கள் இருக்கின்றனவாம்.

 

புகழுக்குரிய நூலகங்கள்

ஆசிரியாவிலேயெ மிகப் பழமையான நூலகம், தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குள்ளன.

உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம், கன்னிமரா நூலகம். சென்னை, எழும்பூரில் அமைந்துள்ளது.

இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம், திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.

கொல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953ஆம் ஆண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே, இந்தியாவின் மிகப்பெரிய நூலகம். இது, ஆவணக் காப்பகமாகவும் நிகழ்கிறது.

 

விழிப்புணர்வு

தமிழ்நாட்டில் உறவினர்களுக்குள் திருமணம்  முடிப்பது சற்று சகஜமாகவே உள்ளது. முறைப்பெண் அல்லது பையன், மாமா, மருமகள் என்று பல திருமணங்கள் இப்படி நடக்கின்றன.

இம்மாதிரியான திருமணங்கள் வாயிலாக பிறக்கும் குழந்தைகள் குறைபாடுள்ளவையாக பிறக்கும் சாத்தியக் கூறுகள் அதிகம் என்று பல ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.

உறவுகள் நெருங்க நெருங்க ஒரே மாதிரியான மரபணுக்கள் சேரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இதனால் ஒரு குடும்பத்தில் மரபணுக்களில் பிரச்சினை இருந்தாலோ, குறைபாடுள்ள உறவினர்கள் இருந்தாலோ, அந்தக் குடும்பங்களில் இம்மாதிரியான திருமணங்களால், ஒரே மாதிரியான மரபணுக்களின் சேர்க்கையால், மீண்டும் குறைபாடுள்ள குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

குடும்பங்களில் உறவினர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது மேல் என்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 

பூமியைச் சந்திரன் சுற்றிவந்தாலும், சந்திரனின் ஒரு பகுதியை மட்டுமே நம்மால் காணமுடியும், இதுவரை அனுப்பிய விண்கலங்கள் அனைத்தும் அந்தப் பகுதியிலேயே தரையிறங்கியுள்ளன. தற்போது, சீனா அனுப்பியுள்ள சாங்கே – 4 விண்கலம், இதுவரை காணாத நிலவின் பகுதியில் தரையிறங்கியுள்ளது. அந்தப் பகுதிக்கு ஸ்டாடியோ டியான்கோ எனப் பெயரிட்டுள்ளாது சீனா.

 

மைக்ரோசிப் பள்ளிச் சீருடை

சீனாவின் தென்பகுதியில் குயிஷூ மற்றும் குயான்சி மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், குழந்தைகளின் சீருடைகளில் மைக்ரோசிப்கள் பொருத்தப்படுகின்றன. குழந்தைகள் பள்ளியில் நுழைந்ததுமே, அது கண்காணிக்க ஆரம்பித்துவிடும். பெற்றோரும் வீட்டில் இருந்தபடியே தங்களின் குழந்தைகள் பள்ளியில் இருப்பதை செல்போன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதற்கு, சீனாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

 

அதிசய நதி 6 மாதம் வடக்கு, 6 மாதம் தெற்காக ஓடும்!

கம்போடியாவில் மிகப் பெரிய அளவிலான டோன்லே சாப் என்ற நன்னீர் எரி இருக்கிறது. இந்த ஏரியின் தென் பகுதியில் இருந்து டோன்லே சாப் என்ற நதி, 115 கி.மீ. தூரம் ஓடி, மேகாங்க் என்ற நதியுடன் கலக்கிறது.

வருடத்தில் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை டோன்லே சாப் ஏரிக்கு நீர் வரத்து அதிகம் இருக்கும். அங்கே நீர் மட்டம் 10 மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துவிடும். அப்போது மேகாங்க் நதி நீர்மட்டம் குறைந்து காணப்படும். அந்த மாதங்களில், டோன்லே சாப் ஏரியில் இருந்து தண்ணீர் டோன்லே சாப் நதி வழியாக மேகாங்க் ஆறுக்குச் செல்லும், இதனால் டோன்லே சாப் நதியின் நீரோட்டம் வடக்கில் இருந்து தெற்கு முகமாக இருக்கும்.

ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஏரியில் நீர்மட்டம் குறைந்து இருக்கும். அதே சமயம் மேகாங்க் ஆற்றில் நீர் வரத்து அதிகம் இருக்கும். இதனால் மேகாங்க் நதியில் இருந்து தண்ணீர், டோன்லே சாப் நதி வழியாக டோன்லே சாப் ஏரிக்கு செல்லும். அதாவது அப்போது டோன்லே சாப் நதியின் நீரோட்டம் தெற்கில் இருந்து வடக்காக இருக்கும்.

 

சிறிய கிருமியின் பெரிய உயிரணு

மனித குடலில் காணப்படும் ஈ கோலி (E. coli bacterium) எனும் கிருமியின் டி என் ஏ வை(DNA) கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் முற்றிலுமாக கட்டமைத்து உள்ளார்கள். இந்த மாற்றியமைக்கப்பட்ட உயிர்ப்பொருள் மூலம் செயற்கை செல்லை உண்டாகியிருக்கிறார்கள். இதில் ஜி,ஏ,டி,சி  எனும் நாற்பது லட்சம் அடிப்படை இணைகள் உள்ளன. இதை ஏ4 பேப்பரில் அச்சிட்டால் கிட்டத்தட்ட 1000 பக்கங்களுக்கு வருமாம். இதுதான் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய உயிரணு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *