தந்தை பெரியாரின் விந்தை உள்ளம்!

ஜுலை 01-15 2019

வ.க.கருப்பையா

”தர்மபுரி மாவட்டத்தில் நாகஅரசம்பட்டி,  கிருஷ்ணகிரி அணையிலிருந்து அரசம்பட்டி கால்வாய் ஓடும் கரைகளில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தின் நெற்களஞ்சியங்கள் எனக் கருதப்படும் பல ஊர்களுள் ஒன்று.

இங்கு திராவிடர் கழகத்தில் முக்கியப் பங்கு கொண்டவரும், தலைவருமான திரு.சம்பந்தம் அவர்கள் இந்த ஊரில் பிறந்தவரே அத்தை அம்மாள் என்ற ஒரு மூதாட்டி இவ்வூரில் பிறந்தவர். தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு மகளைப் போன்றவர். இவரும் வயது முதிர்ந்தவர். தந்தை பெரியார் அவர்களும் -_ மணியம்மையாரும் இவ்வூருக்கு வரும்போதெல்லாம் அவர்களின் உடல்நலத்தைக் கவனித்து அவர்களுக்கு தக்க சேவை செய்பவர்களில் இவரும் ஒருவர் எனக் கூறலாம்.

நாகரசம்பட்டியில் இராமர், லட்சுமணர், சீதா பிராட்டி, சிலைகள் பிரதிஷ்டை செய்து, புதிய கோவில் கட்டி, அக்கோயில் திறப்பு விழாவிற்கு மாவட்ட ஆட்சியராகிய என்னை அழைத்திருந்தார்கள். கோவில் திறப்பு விழாவிற்கான குறித்த நாளும் வந்தது. நான் என் மனைவியுடன் அவ்விழாவிற்கு சென்றேன். நாகரசம்பட்டியைச் சேர்ந்தவுடன் கிராமத்தின் உள்ளே செல்வதற்கு முன்பே, தந்தை பெரியார் அவர்களும், திருமதி மணியம்மையாருடன் அவ்வூரில் முகாமிட்டிருக்கிறார் எனத் தாசில்தார் மூலம் தெரிந்து கொண்டேன். உடனே நான், தந்தை பெரியார் அவர்களை சந்தித்த பின்னர்தான் கோவில் விழாவிற்குச் செல்ல வேண்டும் எனக் கருதி, தந்தை பெரியார் தங்கியிருக்கும் இல்லத்திற்குச் சென்றேன்.

தந்தை பெரியாரை அங்கு கண்டேன். ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தார். திருமதி மணியம்மையார் அவர் பக்கத்தில் உட்கார்ந்திருந்தார். வெள்ளிக் கம்பிகளின் நிறத்திலும் சாயலிலும் கொண்ட நீண்ட தாடியும், தலைச் சிகையும் களையான முகமும் அந்த எண்பதுக்கும் மேலான வயதிலும் அப்படி ஒரு இளமை ததும்பிய பொன்நிற உடம்புடன், வாழ்வில் தனக்கென இல்லாமல் பிறர்க்கு என வாழ்வது என்ற கொள்கையுடைய ஒரு சிறந்த யோகிக்கு ஒப்ப, நிறைந்த அன்பும், பரிவும், பாசமும் கொண்ட மனதுடனும், தன்னைப் பார்ப்பவர்கள், தன் மனதை நிலைக்கச் செய்யும், ஒரு ஈர்ப்பு சக்தியைக் கொண்ட மிகப் பொலிவுடன் தந்தை பெரியார் அமர்ந்திருந்ததைக் கண்டேன்.

நானும் என் மனைவியும், தந்தை பெரியார் அவர்களையும் மணியம்மையார் அவர்களையும் வணக்கம் செலுத்திய பின், அய்யா எப்படி இருக்கிறீர்கள்? எனக் குசலம் விசாரித்து, அய்யா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். அய்யா அவர்களும், மணியம்மையார் அவர்களும் நாங்கள் நலமாக இருக்கிறோம் எனக் கூறினார்கள். நானும் என் மனைவியும் நாகரசம்பட்டிக்கு வருகை தந்த காரணத்தைக் கூறினேன். உடனே பக்கத்திலிருந்த அத்தையம்மாள் சத்தமாக தந்தை பெரியார் அவர்கள் இவ்வூரில் முகாமிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், கடவுள் இல்லை என்று வாதமிடும், ஒரு பெரிய தலைவன் இங்கு இருக்கும் நிலையில், ஒரு மாவட்ட கலெக்டர் இராமலெட்சுமண சீதாபிராட்டி கோவிலின் விழாவிற்கு எப்படி வருகை தரலாம்? எனக் கூறினார்.

இப்பொழுது தந்தை பெரியார் குறுக்கிட்டு, அத்தையம்மா இங்கு வருகை தந்திருக்கும் நபர், இந்த ஜில்லாவின் கலெக்டர். இவர் நம்முடைய கொள்கைக்கு உட்பட்ட நமது நல்ல பிள்ளைகளிலே இவரும் ஒருவர். இவ்வகையில் தம் அன்பை வெளிப்படுத்த என்னிடத்தில் கனிவோடு வந்து, என்னைச் சந்தித்து மனநிறைவு கொண்டுள்ளார். இவர் நமக்கு மட்டும் கலெக்டர் அல்ல. இந்த ஜில்லாவில் வாழும் எல்லாத் தரப்பு மக்களுக்கும் கலெக்டர். ஆதலின் மற்றவர்களின் உணர்வை மதிக்கின்ற வகையில் இராமலெட்சுமண சீதாபிராட்டி கோயில் வைபவத்தில் கலந்து கொள்ளச் செல்வது நியாயமே என்றார்.

இங்கே, தந்தை பெரியார் அவர்கள் கொள்கைக்கும், கடமைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தையும், அவருடைய பரந்த குணத்தையும் அங்கு உள்ளவர்களுக்கு எடுத்துக் காட்டுகிறார். தந்தை பெரியார் அவர்கள் என்னிடத்தில் மிக மிக பாசமும் பரிவும் உடையவராக இருந்தார்.

மைக்ரோசிப் பள்ளிச் சீருடை

சீனாவின் தென்பகுதியில் குயிஷூ மற்றும் குயான்சி மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், குழந்தைகளின் சீருடைகளில் மைக்ரோசிப்கள் பொருத்தப்படுகின்றன. குழந்தைகள் பள்ளியில் நுழைந்ததுமே, அது கண்காணிக்க ஆரம்பித்துவிடும். பெற்றோரும் வீட்டில் இருந்தபடியே தங்களின் குழந்தைகள் பள்ளியில் இருப்பதை செல்போன் மூலம் அறிந்துகொள்ளலாம். இதற்கு, சீனாவில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தந்தை பெரியாரின் தத்துவத்தில் நம்பிக்கை உடையவர்கள், சிஷ்யர்கள், சமத்துவ இயக்கத்தில் அங்கம் வகித்து மதிக்கப்படுபவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில், அய்யாவைப் பார்த்து பரிவுடன் அய்யா தாங்கள் ஏன்? கடவுள் நம்பிக்கை உடையவரும் கடவுளை பூசை செய்பவரும், விபூதி பூசியவரும், பக்திமானாகவும் விளங்கும் நண்பர் திரு.சங்கரனிடத்தில் மிகந்த பாசமும், பரிவும் வைத்திருக்கிறீர்கள் எனக் கேட்டார்கள். அதற்கு பெரியார் அவர்கள் கூறிய பதில், நண்பர்களே! சங்கரன் பக்திமான்தான் அது அவர் வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் செய்யும் காரியம். அக்காரியங்கள் நம் சமத்துவக் கொள்கையை (றிமீக்ஷீவீணீக்ஷீவீனீ) எவ்வாறு பாதிக்கும் என்றார்? கேட்ட நண்பர்களும் பெரியாரின் பரந்த விரிந்த மனப்பான்மையை மிகவும் மகிழ்ச்சியுடன் புரிந்து கொண்டார்கள். இவ்விசயம் எனக்குத் தெரிய வந்தது.

நானும், என்னுடைய குடும்பத்தினரும், தந்தை பெரியார், மணியம்மயார், அத்தையம்மா ஆகியோரிடம் விடைபெற்றுக் கொண்டு கோவில் வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்றோம். தந்தை பெரியாருடனான இந்த சந்திப்பு குறித்து எண்ணுகிறேன். என் மனதில் பின்வரும் கருத்துகளின் அடிப்படையில் எண்ண அலைகள் என் மனதில் வீசலாயின. அய்யா அவர்கள் மனித சமுதாயத்திற்கு செய்து வரும் தொண்டு மிகவும் மகத்தானது. நான் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்து வந்த காலத்தில் தாழ்ந்த குலத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் கிராமங்களைச் சீர்திருத்தும் பணிகளில் இறங்கி பணி செய்து வந்த கல்லூரி மாணவர்களில் நானும் ஒருவன். கிராம மக்களை ஊர்களில் சந்திக்கச் செல்லும் சமயங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளையும் சென்று பார்ப்பதும், அவர்கள் நிலை குறித்து அவர்களிடத்தில் விசாரிப்பதும், அவர்கள் வாழும் வீடுகள், குடிசைகளைச் சென்று பார்த்து, அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, தீண்டாமையைப் போக்கப் பாடுபட்டு வந்த நாளில், நானும் எனது நண்பர்களும் கண்ட சில காட்சிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவைகளாக இருந்தன.

அதிசய நதி 6 மாதம் வடக்கு, 6 மாதம் தெற்காக ஓடும்!

கம்போடியாவில் மிகப் பெரிய அளவிலான டோன்லே சாப் என்ற நன்னீர் எரி இருக்கிறது. இந்த ஏரியின் தென் பகுதியில் இருந்து டோன்லே சாப் என்ற நதி, 115 கி.மீ. தூரம் ஓடி, மேகாங்க் என்ற நதியுடன் கலக்கிறது.

வருடத்தில் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை டோன்லே சாப் ஏரிக்கு நீர் வரத்து அதிகம் இருக்கும். அங்கே நீர் மட்டம் 10 மீட்டருக்கும் அதிகமாக உயர்ந்துவிடும். அப்போது மேகாங்க் நதி நீர்மட்டம் குறைந்து காணப்படும். அந்த மாதங்களில், டோன்லே சாப் ஏரியில் இருந்து தண்ணீர் டோன்லே சாப் நதி வழியாக மேகாங்க் ஆறுக்குச் செல்லும், இதனால் டோன்லே சாப் நதியின் நீரோட்டம் வடக்கில் இருந்து தெற்கு முகமாக இருக்கும்.

ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை ஏரியில் நீர்மட்டம் குறைந்து இருக்கும். அதே சமயம் மேகாங்க் ஆற்றில் நீர் வரத்து அதிகம் இருக்கும். இதனால் மேகாங்க் நதியில் இருந்து தண்ணீர், டோன்லே சாப் நதி வழியாக டோன்லே சாப் ஏரிக்கு செல்லும். அதாவது அப்போது டோன்லே சாப் நதியின் நீரோட்டம் தெற்கில் இருந்து வடக்காக இருக்கும்.

தந்தை பெரியாரின் படங்களை அங்கு குடிசைகளிலும், இல்லங்களிலும் அவர்கள் மாட்டி வைத்து அப்படங்களுக்கு மாலை அணிவித்து, தெய்வப் படங்களுக்கு செய்யும் பூஜையை செய்து வந்த காட்சிதான் அது. நானும், நண்பர்களும் இதுபற்றி அந்த தாழ்த்தப்பட்ட குடிசைவாழ் மக்களிடம் கேட்டோம். ஏன்? தந்தை பெரியார் படத்தை வைத்து, மாலை போட்டு பூஜை செய்து வருகிறீர்கள்? தந்தை பெரியாரே கடவுள் இல்லை, மனிதன் தன்னைத்தானே சீர்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற கொள்கை உடையவராயிற்றே,    அப்படியிருக்க, நீங்கள் அவரைத் தெய்வமாக்கியது, அவர் கொள்கைக்கு எதிர்த்து செய்யும் காரியமாகும் எனக் கேட்டோம்.

இக்கேள்விகளுக்கு அம்மக்கள் கூறிய பதில் மிகவும் விசித்திரமானது. சிந்திக்கக் கூடியதாகவே இருந்தது. தந்தை பெரியார், அம்மக்களுக்கு சரிசமமாக தங்களையும் வாழவைத்தவர். சாதியை அடியோடு அழிக்கத் தன்னந்தனியாகப் பாடுபட்டவர். சமத்துவ தர்மத்தை மக்களுக்குப் போதித்தவர். எல்லா சாதி சமய மக்களும், இப்பூவுலகில் சமமாக வாழ வகை செய்தவர். சாதி சமய கட்டுப்பாடுகள், மனிதனை கட்டுப்படுத்துவதை களைந்து எறிய வேண்டும் என்றவர். இவர் செய்த இப்பெரிய சமூக சீர்திருத்தம் போல் உலகில் யாருமே செய்யவில்லை என அவர்கள் கூறியது மாத்திரமல்லாமல், தந்தை பெரியாரைத் தங்களின் தெய்வமாகவே கருதுவதற்குத் தக்க காரணங்களும் உள்ளன என்றனர்.

தந்தை பெரியார் அவர்கள் சில சமயங்களில் இம்மக்கள் வாழும் பகுதிகளுக்கு செல்வார் என்றும், அவ்வாறு செல்லும் நாட்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளுக்குச் சென்று அவர்கள் இல்லங்களில் சிறிது களைப்பாறுவார் என்றும், அவர்கள் கொடுத்த கஞ்சி அமுதத்தையும் உண்டார் என்றும் கூறினார்கள். நானும், எனது கல்லூரி மாணவர்களும், அவர்கள் கூறியதைக் கேட்டு மிகவும் வியப்படைந்தோம். இவர்கள் கூறியது சிந்திக்கத்தக்க விஷயம் எனக் கூறிவிட்டு, திருச்சிக்குச் சென்றோம்.

இப்பெரிய சாதனைக்கு வித்திட்டவர் தந்தை பெரியார் அல்லவா? தந்தை பெரியார் தாழ்த்தப்பட்ட இம்மக்களுக்கு சமத்துவ தர்மத்தைக் கொடுத்து, உயர்வாக்கி, மற்றவர்களுடன் சமத்துவமாக வாழ வகை செய்தவர் என்பதால் அம்மக்கள் அந்த அளவிற்குப் பெரியாரை மதித்தனர். தரவு: திரு. ப.சங்கரன் ஐ.ஏ.எஸ். அவர்கள் எழுதிய என் வாழ்வில் சந்தித்ததும் _ சாதித்ததும் என்ற நூலில் பக்கம் (224, 225, 226, 227) இரண்டாம் பாகத்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *