தொலைத்தொடர்பும், அறிவியல் கண்டுபிடிப்புகளும் அதிகம் இல்லாத காலத்தில் வடஇந்தியாவில் ஆங்கிலத்தில் வெளிவந்த “நான் ஏன் நாத்திகன்?’’ என்ற பகத்சிங்கின் கட்டுரையை பெரிதும் முயன்று தேடி எடுத்து அதைத் தமிழில் மொழிபெயர்த்து தந்தை பெரியார் வெளிவிட்டார். பின்னாளில் ஆங்கிலத்தில் அதை மீண்டும் வெளியிட ஆங்கில மூலம் கிடைக்காதபோது, பெரியார் தமிழ்மொழியில் வெளியிட்ட நூலே பயன் பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?