(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைத் தொகுப்பு)
வெளியீடு:
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே.சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை – 24. கைப்பேசி: 94446 32561
பக்கங்கள்: 208 விலை: 100
இந்திய நாட்டின் இருண்டகாலமாக வரலாற்றில் இடம் பெறப் போகும் காவி பாசிச ஆட்சியான நரேந்திர மோடி அரசின் மக்கள் விரோத மதவெறி செயல்பாடுகளை தெளிவுபடுத்தும் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். கார்ப்பரேட் முதலாளிகளின் எடுபிடி அரசாய், அவர்களின் அடியாள், படையாளாய் விளங்கும் இந்த அரசின் மக்கள் விரோத பொருளாதார திட்டங்களான ஹைட்ரோகார்பன், ஜி.எஸ்.டி., தொழிலாளர் விரோத சட்டங்கள் ஆகியவற்றை விளக்கும் கட்டுரைகள், பொதுத்துறை வங்கிகளின் சீரழிவு, பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் பேரால் நடத்தப்பட்ட கார்ப்பரேட் கொள்கைகள் குறித்த கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கல்வியை சீரழித்து காவி மயமாக்க இந்த அரசால் மேற்கொள்ளப்பட்ட புதிய கல்விக் கொள்கைகள், வேத கல்வி வாரியம், நீட் தேர்வு உள்ளிட்ட கட்டுரைகளும், உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் ஜாதி வெறி காரணமான உயிரிழந்த ரோகித் வெமுலா பற்றிய கட்டுரையும் தொகுக்கப்பட்டுள்ளன.
பார்ப்பன பாசிச ஆட்சியின் கவுரி லங்கேஷ் உள்ளிட்ட படுகொலைகள், கலவரங்கள், உரிமை மறுப்புகள் ஆகியவற்றை படம் பிடிக்கிறது இந்நூல். தான் கோரியவண்ணம் பணத்தை விடுவிக்க மறுக்கும் ரிசர்வ் வங்கி, தனக்கு கட்டுப்பட மறுக்கும் சி.பி.அய் தலைமை, தகவல் ஆணையம், ஆர்.எஸ்.எஸ். ஆணைகளை மதிக்காத நீதிமன்றம் அனைவரையும் தேசத்தின் எதிரியாக சித்தரித்து அழிக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பாசிச வெறியாட்டத்தை தோலுரிக்கிறது இளைஞர்களும், சமூக ஆர்வலர்களும், பாசிசத்திற்கு எதிராக போராடுபவர்களும் அவசியம் படித்து பரப்ப வேண்டிய அரிய கருத்துகளைக் கொண்ட கருத்துக் கருவூலம்.
– வை.கலையரசன்