தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில், வெற்றி பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று (25.5.2019) காலை பெரியார் திடலுக்கு வருகை தந்து தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் வரவேற்று பயனாடை அணிவித்து பெரியார் நூல்களை வழங்கி சிறப்பித்தார்.
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில்,
25.5.2019 காலை 10.30 மணியளவில் சென்னையில் திராவிடர் கழகத் தலைமையகம் அமைந்துள்ள பெரியார் திடலுக்கு, தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் வெற்றி பெற்ற தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்தனர்.
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் தந்தை பெரியார் நினைவிடத்திற்கு சென்று, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வரவேற்றார். மலர்வளையத்தை வைத்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து அன்னை மணியம்மையார் மற்றும் சுயமரியாதைச் சுடரொளிகள் நினை விடங்களில் கவிஞர் கனிமொழி தலைமையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
தி.மு.கழகத்தின் சார்பில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தமிழர் தலைவர் அவர்கள், தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்?’’ நூலினை வழங்கி, இனிப்பும் கொடுத்து சிறப்பித்தார்.
பின்னர் அனைவரும் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றனர்.