மருத்துவம் : உடல் பருமன் தவிர்க்க உரிய வழிகள்

ஜூன் 01-15 2019

இன்று உலகளவில் உடல் பருமன் உடல் நலத்தைக் கெடுக்கும் முக்கியமான ஒன்று. எனவே அதைத் தடுக்க வேண்டும். அதற்கு கீழ்க்கண்ட வழிகளைப் பின்பற்றுவது கட்டாயம்.

*           நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தவும்.

*           அதிக உடல் கொழுப்பு உள்ள நபர்கள் சிறு தானியங்களை உணவாகக் கொள்ளலாம்.

*           காலை திரவமாக முதல் நாள் இரவு ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை 200 மி.லி. தண்ணீரில் ஊறவைத்து, காலையில் எழுந்ததும் நீரை மட்டும் வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

*           தினமும் சுமார் 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

*           நல்ல புரதச் சத்தைப் பெற நிலக்கடலை  சாப்பிடலாம்.

*           பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்கு பதில் கைக்குத்தல் அரிசி, சிறுதானியங்களைப் பயன்படுத்தலாம்.

*           கொழுப்பைக் கூட்டுவதில் முக்கிய பங்கு கொண்ட சமையலுக்கான எண்ணெயை 10 நாள்களுக்கு ஒருமுறை மாற்றவும். கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் மூன்றையும் மாற்றி மாற்றி சமைக்கவும்.

*           காலையில் நாம் அருந்தும் பால் சேர்த்த டீக்கு பதில் கிரீன் டீ, லெமன் டீ, லவங்கப்பட்டை டீயைப் பருகலாம்.

*           சர்க்கரை அளவு அதிகமுள்ளவர்கள் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை 150 முதல் 200 மி.லி தண்ணீர் அருந்த வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு சிட்டிகை பட்டைத்தூள் கலந்து குடிக்கலாம். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்.

*           பசி எடுக்கும்போது பருப்பு வகை உணவான பிஸ்தா, பாதாம், வால்நட், நிலக்கடலை கலந்து கலவையைச் சாப்பிடுங்கள். இது உடலில் மக்னீசியம் குறைபாட்டைப் போக்கும்.

*           பால் சேர்க்காத காபி அருந்தலாம். பால் சேர்த்த டீ, காபியை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அருந்த வேண்டும்.

*           எண்ணெய் நொறுக்குத் தீனிகளைத் தவிர்த்துவிட்டு, வறுத்த நிலக்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ், பச்சைப்பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.

*           தூக்கமின்மையே உடல் பருமனாக முக்கியக் காரணம். இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை தூங்குவதற்கு சரியான நேரம். வால்நட் ஒன்று சாப்பிட்டு உறங்கினால் தூக்கம் வரும்.

*           காலை உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக் கூடாது.

*           இட்லி, தோசை, ஆப்பத்துக்கு மாவு அரைக்கும்போது சிறிது வெந்தயம் சேர்த்து அரைக்க வேண்டும். இது செரிமானத்துக்க உதவும்.

*           இயற்கையாகக் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு உதவும். புற்றுநோய்க்கான வாய்ப்பு குறையும்.

*           வேலை செய்யுமிடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்தே வேலை பார்க்காமல், நின்றுகொண்டே வேலை செய்வது, அடிக்கடி உலவுவது என சுறுசுறுப்பாக இருப்பது நல்லது.

*           பரோட்டா, எண்ணெய் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

*           நாம் உண்ணும் உணவில் மஞ்சள்தூள், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்ப்பது உடல் எடையைக் குறைக்க உதவும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *