சொத்துக் குவிப்புப் புகார் காரணமாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ஜி. பாஸ்கரன் கேரள மாநில அரசு வழக்குரைஞர் பதவியை ஜனவரி 7 இல் ராஜினாமா செய்துள்ளார்.
ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் விவகாரம் தொடர்பாக ஒரு நபர் கமிசன் நியமிக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் ஜனவரி 8 இல் கூறியுள்ளார்.
இந்தியாவின் இலகு ரக விமானம் தேஜஸ் விமானப் படையிடம் ஜனவரி 10 இல் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் கமிசனர் குரோஷி ஜனவரி 9 இல் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் விரிவாக்கச் சட்டம் சட்டசபையில் ஜனவரி 13 இல் நிறைவேற்றப்-பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாநிலத்தின் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பெண் நிக்கி ஹாலே ஜனவரி 13 இல் பொறுப்பேற்றுள்ளார்.
ஜனவரி 14 அன்று சபரிமலையில் மகரஜோதியைத் தரிசிக்கச் சென்ற பக்தர்கள் மீது ஜீப் மோதிய-தாலும், அதனையொட்டி நிகழ்ந்த நெரிசலினாலும் 106 பக்தர்கள் உயிரிழந்தனர்.
பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி மு. மருதமுத்து தலைமையில் குழு அமைத்து ஜனவரி 16 இல் முதல் அமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.
மும்பையில் 31 மாடி ஆதர்ஷ் கட்டிடம், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறிக் கட்டப்-பட்டுள்ளதால், அதை 3 மாதத்தில் இடிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் ஜனவரி 17 அன்று உத்தரவிட்டுள்ளது.
தமிழக மேல் – சபைத் தேர்தல் ஏற்பாடுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் ஜன 17 இல் மறுத்துள்ளது.
கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா மீது வழக்குத் தொடர ஆளுநர் பரத்வாஜ் ஜனவரி 21 இல் அனுமதி வழங்கியுள்ளார்.
நீர் நிலைகள், தாவரங்கள், மரங்கள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சும் அடையாறு சுற்றுச் சூழல் பூங்காவினை முதல் அமைச்சர் கலைஞர் ஜனவரி 22 இல் திறந்து வைத்துள்ளார்.