பதிவுகள்

அக்டோபர் 16-31

  • ஆந்திராவில் தனி தெலுங்கானா தனி மாநிலம் கோரி செப்டம்பர் 24 அன்று 48 மணி நேர மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
  • அய்.நா. அவையில் இலங்கை அதிபர் ராஜபக்சே பேசுவதைக் கண்டித்து செப்டம்பர் 24 அன்று நியூயார்க் நகரில் பொங்கு தமிழ் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் செப்டம்பர் 25 அன்று விமானம் விழுந்து நொறுங்கியதில் 8 தமிழர்கள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர்.
  • சவுதி அரேபியாவில் வாழும் பெண்கள் 4 ஆண்டுகளுக்குப்பிறகு நடைபெற உள்ள நகரசபைத் தேர்தலில் போட்டியிடவும், ஓட்டுப்போடவும் உரிமை வழங்கப்பட்டுள் ளதாக அந்நாட்டின் மன்னர் அப்துல்லா செப்டம்பர் 25 அன்று அறிவித்துள்ளார்.
  • அணு ஆயுதங்களைச் சுமந்து சென்று குறிப்பிட்ட இலக்கைத் தாக்கக்கூடிய பிருத்வி-_2 ஏவுகணை செப்டம்பர் 26 அன்று ஒடிசா மாநிலம் பலசோர் அருகில் சந்திப்பூர் கடலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஏவுகணை சோதனைத் தளத்திலிருந்து வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
  • ஓட்டுக்குப் பணம் கொடுத்த வழக்கில் அத்வானியின் மேனாள் உதவியாளர் சுசீந்திர குல்கர்னியின் முன்ஜாமீன் மனுவை டில்லி நீதிமன்றம் செப்டம்பர் 27 அன்று தள்ளுபடி செய்ததையடுத்து,  குல்கர்னி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • லிபியாவில் அதிபர் கடாபியின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி நகரான சிர்தேவுக்குள் அவரது எதிர்ப்பு அமைப்பினர் செப்டம்பர் 28 அன்று நுழைந்தனர்.
  • 19 ஆண்டுகளாக நடைபெற்ற வாச்சாத்தி கற்பழிப்பு வழக்கில் வனத்துறை, காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் உள்பட 215 பேருக்கு சிறைத் தண்டனையும், 12 பேருக்கு தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து செப்டம்பர் 29 அன்று தர்மபுரி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • திருவெறும்பூர் பேரூராட்சியை திருச்சி மாநகராட்சியுடன் இணைத்தது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் செப்டம்பர் 29 அன்று ஆணையிட்டுள்ளது.
  • பிறந்த நாள் பரிசாக ரூ. 2 கோடி பெற்றுக் கொண்டதாக முதல் அமைச்சர் ஜெயலலிதா மீது சி.பி.அய் தொடர்ந்த வழக்கினை செப்டம்பர் 30 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • வெளிநாட்டு வங்கியில் கோடிக்கணக்கில் கருப்புப் பணம் வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குதிரைப் பண்ணை அதிபர் ஹசன் அலிகானின் ஜாமீன் மனுவை செப்டம்பர் 30 அன்று உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
  • 2,000 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-_2 ஏவுகணை ஒடிசாவின் பாலசூர் அருகேயுள்ள வீலர் தீவிலிருந்து செப்டம்பர் 30 அன்று வெற்றிகரமாக சோதனை செய்து பார்க்கப்பட்டது.
  • இரண்டாவது உலகத் தமிழர்கள் பொருளாதார மாநாடு துபாயில் அக்டோபர் 1 அன்று தொடங்கி 4 நாள்கள் நடைபெற்றது.
  • கணினி உலகில் புரட்சியை ஏற்படுத்திய ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அக்டோபர் 5 அன்று மரணமடைந்தார்.
  • கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினரும் போராட்டக் குழுவினரும் அக்டோபர் 7 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *