நினைவு நாள்: 23.05.1989
மதுரையில் வாழ்ந்தபோது கலைவாணர் தொடர்பால் பெரியார், அண்ணா, கலைஞர், பாவேந்தர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களின் நட்பு கிடைத்தது. அதனால் திராவிடர் இயக்கப் பற்றும், பகுத்தறிவுப் பார்வையும் கவிஞருக்குக் கிடைத்தது. திரைத்துறையில் இவர் எழுதிய பாடல்களில் புதிய உத்திகளைக் கையாண்டார். உழைப்பாளர்களைப் பற்றி “சும்மா இருந்தா சோத்துக்கு நட்டம்; சோம்பல் வளர்ந்தா ஏற்படும் கஷ்டம்’’ என உழைப்பின் பெருமையை இன்றும் உலகம் போற்றும்.