Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

முற்றம் : செயலி

 

சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி

சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் ‘சென்னைக் குடிநீர் குறை தீர்க்கும் செயலி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதில் பொதுமக்கள், நுகர்வோர் தங்களது குடிநீர், கழிவுநீர் சம்பந்தமான புகார்களை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் உடனுக்குடன் எந்த இடத்திலிருந்தும், எந்த நேரத்திலும் செல்போன் மூலமாக தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், குடிநீர், கழிவுநீர் புகார் சம்பந்தமாக படங்கள், புகைப்படங்கள் ஏதேனும் இருப்பின் அதனை செல்போன் மூலமாகவே பதிவேற்றம் செய்து நிலைமையை தெரிந்து கொள்ளலாம்.

புகார்களை பதிவு செய்யும் போது எந்தவிதமான புகார் என்பதை தேர்வு செய்து கேட்கப்படும் விவரங்களை அளிக்க வேண்டும்.

பின்னர் ஒரு பிரத்யேக புகார் பதிவு எண் உருவாக்கப்பட்டு அந்த எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.

பொது மக்கள் தங்களது புகார் மீதான நடவடிக்கை விவரங்கள் மற்றும் அப்போதைய நிலை பற்றிய விவரங்களை செயலி மூலமாகவே அறிந்து கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=metrowater.cmwssb.grs

– அரு.ராமநாதன்