‘விளையாடு’
அரசுப்பள்ளி ஒன்றில் விளையாட்டுக்கென்று ஒரு வகுப்பு இல்லை. அதற்கென ஒரு ஆசிரியர் இல்லாததால்? அதனால் விளைந்தது? அந்த வகுப்பு மாணவர்களை 100 விழுக்காடு தேர்ச்சிக்காக அவர்களின் கை, கால்களை கட்டிப் போட்டுவிட்டனர். இதுதான் இக்குறும்படம் முதல் கடைசி. பிறகு? அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர், “மாணவர்களுக்கு விளையாட்டு முக்கியம்’’ என்கிறார். துணைத் தலைமையாசிரியர், “இதனால், 100% தேர்ச்சி விகிதம் குறையும்’’ என்கிறார். ஆனால், விளையட்டுத் துறை ஆசிரியரோ, ‘ஏட்டுக்கல்வி எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பை கொடுத்துள்ளது? ஜாதி, மத பேதமில்லாதது விளையாட்டு ஒன்றுதான். கல்வியில் கவனம் வைப்பதற்கு விளையாட்டு உதவி செய்கிறது’ போன்ற கருத்துக்களை முன்வைத்து தன் கடமையைச் செய்கிறார். மாணவர்கள் ஆனந்தத்துடன் விளையாடுகின்றனர். இதுதான் ‘விளையாட்டு’ _ குறும்படத்தின் கதை. Sri Sports தயாரிப்பில், Tamil Short cuts வழங்கியிருக்கும் 18 நிமிடம் இக்குறும்படத்தை தினேஷ்குமார் எழுதி இயக்கியிருக்கிறார். Youtubeஇல் ‘vilaiyadu’ என்ற தலைப்பில் இக்குறும்படத்தைக் காணலாம்.
– உடுமலை