அனிச்சம்
எந்த சடங்கும் சம்பிரதாயமும் இல்லாமல் “லிவிங் டுகெதராக’’ வாழலாம் என்று சொல்கிற ஆணுக்கும், சடங்கு சம்பிரதாயங்களுடனும் தாலி கட்டி சமுக அங்கீகாரத்துடன் கலாச்சாரப்படிதான் வாழ்வேன் என்று சொல்கிற பெண்ணுக்கும் இடையில் காதல் மலர்ந்தால் எப்படியிருக்கும்? இதுதான் அனிச்சம் குறும்படத்தின் கதை. மூடச்சடங்குகளிலிருந்து மீளவும், அப்படி மீண்டுவிடக்கூடாது என்கிற முயற்சியும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முழுநீள திரைப்படத்தில் சொல்லவேண்டிய கதை இது. ஆனால் ஒரே காட்சியில் சொல்லிவிட முடிகிறது. அதுதான் குறும்படத்தின் வசதி. லிவிங் டுகெதரில் காதலிக்கு சில அய்யங்கள் இருக்கிறது. காதலி ஏற்றுக்கொள்ளும்படி புரியவைக்க அவனால் முடியவில்லை. முடிவு? இருவரும் பிரிந்து விடுகின்றனர். வழக்கமான கதைதானே என்று இதைப் பார்க்கமுடியவில்லை. இதுபற்றிய உரையாடல் தொடர்ந்து நிகழ்வது நல்லது. அப்பணியை இக்குறும்படம் செய்திருக்கிறது ‘தமிழ் சார்ட்கட்ஸ்’ (Tamizh Short Cuts) வெளியிட, எழுதி செம்மையாக இயக்கியிருக்கிறார் ஜெயக்குமார் லாரன். யூ டியூபில் 9 நிமிடக் காணொளியாக இதைக் காணலாம்.
– உடுமலை
Leave a Reply