முற்றம் : செயலி

ஏப்ரல் 1-15 2019 முற்றம்

செயலி : சி விஜில்(C VIGIL)

அரசியல் பிரமுகர்கள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது, பின்பு பரிசுகள், பொருள்கள், மதுபானம் அளிப்பது, அடியாட்களை வைத்து மிரட்டுவது போன்ற அனைத்து வகையான விதிமீறல்கள் தொடர்பாகவும் எளிதில் புகார் அளிக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் இந்த சி விஜில் ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் நிகழ்வை புகைப்படம் அல்லது 2 நிமிட வீடியோவாக எடுத்து புகாராக பதிவு செய்யலாம், குறிப்பாக Auto location capture என்ற விருப்பம் மிகவும் உதவியாக இருக்கும். மேலும் ஏற்கனவே எடுக்கப்பட்ட புகைப்படம், வீடியோவை இந்த செயலி மூலம் அனுப்பமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலி புகார் பதிவை ஏற்க சுமார் 5 நிமிடம் எடுத்துக்கொள்ளும், புகார் அளித்த பிறகு அனுப்பியவரின் செல்போனுக்கு அடையாள எண் அனுப்பப்படும் என்றும், இந்த எண்ணைக் கொண்டு நமது புகார் என்ன நிலையில் இருக்கிறது என்பதை டிராக் (Track)  செய்து எளிமையாக தெரிந்து கொள்ளமுடியும்.

அதன்பிறகு சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு செல்லும், பின்பு புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து, மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும். பின்னர் தேர்தல் ஆணையத்தின் தேசிய குறை தீர்வு மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளித்த 100 நிமிடங்களுக்குள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு செயலி செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. பின்பு தேர்தல் முடிவுக்கு பிறகு இந்த செயலி செயல்படாது. மேலும் புகார் அளிக்கும் வாக்காளர்கள் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://play.google.com/store/apps/details?id=in.nic.eci.cvigil

 – அரு.ராமநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *