குரல்

அக்டோபர் 16-31
  • ரசிகர்கள் வேண்டாமென நான் சொல்லவில்லை. அதற்கொரு அமைப்பு தேவையில்லை என்கிறேன். தனிப்பட்ட மனிதனுக்கு எதற்கு மன்றங்கள்? அதற்காக ஏன் ரசிகர்கள் நேரத்தைச் செலவிட வேண்டும்? என் படங்கள் பொழுதுபோக்குவதற்கு மட்டுமே.

    மக்களுக்காகப் பணியாற்றுகிற எத்தனையோ நல்ல தலைவர்கள் இருக்கிறார்கள். நடிகர்கள்தான் தலைவராகிறார்கள் என்று சொல்லி, தலைவர்களின் அர்ப்பணிப்பையும் பொதுநலத்தையும் நாம் கொச்சைப்படுத்த வேண்டாம்.         – நடிகர் அஜித்

  • பன்னாட்டு நிதியத்திடம் (அய்.எம்.எப்) தற்போது உள்ள பணம் தற்போதைய பிரச்சினைகளைச் சமாளிக்கப் போதுமானதுதான். ஆனால், இந்தக் கடன் நெருக்கடி பிற நாடுகளுக்கும் பரவும் பட்சத்தில் அவற்றுக்குக் கடன் தவணைகள் அளிக்க பன்னாட்டு நிதியத்திடம் பணம் இல்லை.

    கிறிஸ்டைன் லகார்ட்,  தலைவர், பன்னாட்டு நிதியம்

  • நீங்கள் ஒரு கூட்டாளியை இழக்க நேரிடும் என்று அமெரிக்காவிடம் தெரிவித்துவிட்டோம். பாகிஸ்தானுடன் உள்ள உறவை நீங்கள் முறிக்க முடியாது. அப்படி ஒரு முடிவையே எடுப்போம் என அமெரிக்கா தேர்வு செய்தால் அது உங்களுடைய சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. பாகிஸ்தான் – அமெரிக்கா நட்புறவை முழுமையான சரிசம நட்பு என்று கருத முடியாது.

    ஹினா ரப்பானி, வெளியுறவு அமைச்சர், பாகிஸ்தான்

  • தமிழன் கதைகளைக் கேட்டே கெட்டுவிட்டான் என்பார்கள் அந்த நிலை மாற வேண்டும். இன்றைய இளைஞர்களிடம் பெரியாரிடம் பிறந்த சுயமரியாதைக் கொள்கைகளை, சிந்தனைகளை, தத்துவங்களைத் தேட வேண்டியுள்ளது.

    இன்றைய தமிழ் இளைஞர்களிடம் தமிழ் உணர்வு மங்கி வருகிறது. தமிழன் உணர்வை இழந்து தாழ்ந்து கொண்டிருக்கிறான். தமிழன் மனிதனாக மாற வேண்டும். தமிழனிடம் மங்கிவரும் தமிழ் உணர்வை முறையாக வளர்க்க வேண்டும்.

    க. அன்பழகன், பொதுச்செயலாளர், தி.மு.க.

  • இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்துவது மிகப்பெரிய பிரச்சினை. இது, இரு நாட்டுக் கடற்படைகளும் சார்ந்த விசயம் அல்ல. மத்திய, மாநில அளவில் அரசியல் தலைமைகள் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை. இரு நாட்டு அரசுகளும் மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும். பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்படும் முடிவை கடற்படை செயல்படுத்தும்.

    – நிர்மல் வர்மா, தளபதி, இந்தியக் கடற்படை

  • நகர்ப்புரங்களில் தினமும் 32 ரூபாய்க்கு மேல் செலவிடுவோரும் கிராமப்புறங்களில் தினமும் 26 ரூபாய்க்கு மேல் செலவிடுவோரும் வறுமைக்கோட்டு வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்று திட்டக்குழு அறிவித்த அளவுகோல் ஆச்சரியம் அளிக்கிறது.நாய் போன்ற விலங்குகள் மட்டுமே இந்த 32 ரூபாயை வைத்து வாழமுடியும். இது திட்டக் குழுவுக்குத் தெரியுமா? தினமும்  32 ரூபாய்க்குக் குறவைகச் செலவிடுவோரை ஏழையிலும் ஏழையாகக் கருத வேண்டும். வறியவர்கள் என அவர்களை அழைக்கலாம். தற்போது நிர்ணயித்துள்ள அளவுகோலை திட்டக் குழு மாற்றியமைக்க வேண்டும்.

    சக்சேனா,  உறுப்பினர், தேசிய ஆலோசனைக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *