ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனார்
நினைவு நாள்: 22.2.1953
இன்று தமிழகத்தில் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்ன செய்தது என்று நாக்கில் நரம்பின்றிப் பேசும் அறிவுஜீவிகளுக்கு சவுந்தரபாண்டியனார் கொண்டு வந்த தீர்மானமே பதில் கூறும். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்தின் வழிவந்தவர். 12 ஆண்டுகள் சென்னை சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தபோது, “தாழ்த்தப்பட்டவர்கள் பொதுச்சாலைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதற்குத் தடை செய்வோரைத் தண்டிக்க வேண்டும் (4.8.1921) என்ற தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றச் செய்தார்.’’ இன்றைய சுயமரியாதை ஸ்தாபனத்திற்கு அசைக்கமுடியாத ‘அஸ்திவாரம்’ என்று தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்.