தமிழகம் பெரியார் மண்ணாகவே இருக்க வேண்டும்

பிப்ரவரி 01-15 2019

– ஜிக்னேஷ் மேவானி

“ராம்விலாஸ் பஸ்வான், ராமதாஸ் அதாவ்லே போன்ற தீவிரமாக இயங்கிவந்த தலித் இயக்கங்களின் தலைமைகள், பா.ஜ.க. பக்கம் சென்றிருக்கின்றன. மும்பையில் ‘பீம் சக்தி, சிவ் சக்தி’ போன்ற முழக்கங்களோடு சிவசேனையோடு கூட்டணி அமைத்த தலித் இயக்கங்களின் போக்கை எப்படிப் பார்க்கிறிர்கள்?’’

“சில தலித் தலைவர்கள், ‘பாபாசாகேப் அம்பேத்கர், காங்கிரஸைத்தான் எதிர்த்தார்; பா.ஜ.க.வை அல்ல’ என்று மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அம்பேத்கர், காங்கிரஸை எதிர்த்தார்தான். ஆனால், அதைவிட நூறு மடங்கு அதிகமாக ஆர்.எஸ்.எசின் பாசிசக் கருத்துகளை எதிர்த்தார். இந்துத்துவ மதவாதிகளை எதிர்த்தார். இதை அந்த மோசடிப் பேர்வழிகள், திட்டமிட்டுத் தங்களுடைய குறுகிய அரசியல் லாபத்துக்காகவும் சுயநலத்துக்காகவும் மறைக்கிறார்கள். தலித்துகளை வேறு  யாரை விடவும் அதிகமாக ஏமாற்றியது போலி தலித் தலைமைகள்தான். அவர்கள், தலித்துகளின் நலனை வெளிப்படுத்தும் அசலான பிரதிநிதிகள் அல்லர்.’’

“தமிழக மக்களுக்கு ஜிக்னேஷ் மேவானியின் செய்தி என்ன?’’

“தமிழகம், பெரியாரின் மண்ணாகவே இருக்க வேண்டும். சாவர்க்கரையும், சங் பரிவாரையும், பா.ஜ.க.வையும் அனுமதிப்பதைவிட தமிழ்நாட்டுக்குக் கெடுதல் இருக்க முடியாது. பா.ஜ.க. வளைத்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வை மறுபடியும் தேர்ந்தெடுத்தால், அது தற்கொலை முயற்சியாக அமைந்துவிடும்.’’

நன்றி: ‘ஆனந்த விகடன்’ 30.1.2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *