அறிவியலில் சாதனை படைக்க, ஆய்வு செய்ய மாணவர்களுக்கென்றே உதவித் தொகையுடன் கூடிய நேரடி அய்ந்தாண்டு எம்.எஸ்சி படிக்க வாய்ப்பும் உள்ளது.
இதற்கு பிளஸ் டூவில் உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் பிரிவில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளி பிரிவினர் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றி¢ருக்க வேண்டும். 2017, 2018இல் தேர்ச்சி பெற்றிருப்பவர்களும், தற்போது பிளஸ் டூ தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் 1999 ஆகஸ்டு 1, பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு உண்டு.
வெற்றி பெற்றவர்களின் மதிப்பெண் தரவரிசைப்படுத்தப்பட்டு இடஒதுக்கீட்டு முறைப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும். எம்.எஸ்சி படிக்க சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.60 ஆயிரம் உதவித் தொகையும், கோடைக்கால பயிற்சிப் பணிக்கு ரூ.20 ஆயிரமும் உதவித் தொகையாக 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
இப்படிப்பில் சேர விரும்புவோர் ‘நெஸ்ட்’ (NEST) எனப்படும் சிறப்பு நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொதுப் பிரிவினர், ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1200, எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளி பிரிவினர்களுக்கு கட்டணம் ரூ.600 மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வு நடைமுறைகள், பாடத் திட்டங்கள், விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இணையதளத்தில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 11, 2019
நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூன் 1, 2019
மேலும் விவரங்களுக்கு: www.nestexam.in