தந்தை பெரியாரின் முதன்மை இலக்கும் கொள்கையும் ஜாதி ஒழிப்பே!
சமுதாயத்தின் மீது ஆரிய பார்ப்பனர்கள் சுயநலத்திற்குத் திணித்த பிணித்த நோய் ஜாதி!
அந்நோய்க்கு ஒரே மருந்து சுயமரியாதை உணர்வும், மனிதநேய மனமும்தான்!
இடஒதுக்கீட்டில் ஜாதி அளவுகோல் சமூகநீதிக்கான மருந்தாகத்தான் பயன்படுத்தப்படுகிறது. அது ஜாதி வளர்க்காது!
பெயருக்குப் பின்னால் ஜாதியைப் போடுவதை கேவலமாக நினைக்கும் உளப் பக்குவத்தை தந்தை பெரியார் ஊட்டி வளர்த்தார். அதன் விளைவாய் தமிழகத்தில் பெயருக்குப் பின் ஜாதியைக் குறிப்பிடும் அவலம் முற்றாக ஒழிந்தது. ஆனால், அரசியல் ஆதாயத்திற்காக ஜாதிய அரசியல் கட்சிகள் மீண்டும் ஜாதி பெயரைப் போடும் இழிநிலையை உருவாக்கி வருகிறார்கள்.
ஆனால், ஜாதி அரசியல் செய்து ஜாதி வாக்கு வங்கிகளை உருவாக்கி பதவி பெறத் துடிப்பவர்களினால் ஜாதி வெறி உணர்வு சில ஆண்டுகளாக ஊட்டப்பட்டு வருகிறது. அதன் விளைவுதான் ஆணவக் கொலைகள்!
உள்ளத்தால் ஒன்றுபட்டு வாழ்வில் இணைவோரை கூலிப்படை கொண்டு கொலை செய்யும் கொடுமை தமிழகத்தில் நடக்க இனியும் அனுமதிக்கக் கூடாது. அதற்கு அனைவரும் ஒன்று சேர்ந்து தீர்வு கண்டாக வேண்டும்.
ஆம்! டிசம்பர் 30இல் ஓசூரில் ஒன்று சேர்வோம். ஜாதியை ஒழித்து சமத்துவம் காப்போம்!