தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து வாழ்த்து

டிசம்பர் 16-31 2018

ஆசிரியர் அவர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பதை அறிந்த ஸ்டாலின் அவர்கள், உடனே பெரியார் திடலுக்கு வருகை தந்து, ஆசிரியருக்கு பயனாடை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ஆசிரியரின் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியும் வெளியிட்டார். வரலாற்று ஆவணமாகக் கொள்ளத்தக்க அச்செய்தி.

“திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு 86-வது ஆண்டு பிறந்த நாள் இது. 9 வயதில் இருந்தே மேடையில் பேசத் தொடங்கியர். 11 வயதில் சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் பேசியவர். இளம் வயதில் இவர் பேசியதைக் கேட்ட அண்ணா, திராவிட இயக்கத்தின் திருஞானசம்பந்தர் என்று பா£ட்டினார். நல்ல வரு£னம் தந்து வந்த வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு பெரியார் அழைப்பை ஏற்று விடுதலை நாளிதழின் ஆசிரியர் ஆனார். 55 ஆண்டுகளாக அதன் ஆசிரியராக திறம்பட செயலாற்றி வருகிறர். மிசா சிறைவாசியாக சென்னை சிறையில் நானும், அவரும் 1 ஆண்டு இருந்தோம். அவரும் தாக்கப்பட்டார். இதுவரை 52 முறை சிறை சென்றுள்ளார். படிப்பது, எழுதுவது, பிரச்சாரம் பயணம், பத்திரிகை பணி, கல்விப் பணி என்று சளைக்காமல் செயல்படும் அவர் ‘தமிழினப் பல்கலைக்கழகம்’ என்று அழைக்கலாம். பொதுவாக எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் திராவிடர் கழகம் என்ன சொல்கிறது வீரமணி என்ன அறிக்கை கொடுக்கிறார் என்றுதான் கலைஞர் உற்றுக் கவனிப்பார். அப்படித்தான் நாங்களும் கவனிக்கிறோம். நாங்கள் செல்லும் பாதையை பெரியார் திடல்தான் தீர்மானிக்கிறது. மதவாத ஆபத்தும், சாதி வெளியும் தலைதூக்கும் இந்தக் காலகட்டத்தில் ஆசிரியர் வீரமணி அவர்களின் வழிகாட்டுதல்கள் அதிகம் தேவை. அவருக்கு தி.மு.க. சார்பில் என்னுடைய பிறந்தநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *