பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், குருதிக்கொடை

டிசம்பர் 16-31 2018

சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமையப்பெற்றுள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2018 இன்று காலை முதல் குருதிக்கொடை சிறப்பு முகாம் மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் பிறந்த நாளை முன்னிட்டு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குருதிக்கொடை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை  பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. பொது மருத்துவம், தாய் சேய் நலம், நீரிழிவு நோய், கண் மருத்துவம், காது மூக்கு  தொண்டை மருத்துவம், பல் மருத்து வம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்துறைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *