O.K. என்றால் என்ன?

டிசம்பர் 16-31 2018

இன்று உலகம் முழுக்க படித்தவர்கள் முதல் பாமரர் வரை ஒவ்வொருவர் வாயிலும் O.K என்று சொல்வது வழக்கில் உள்ளது. சரி என்ற பொருளில் அது பலராலும் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், இந்த O.K வின் பொருள் என்ன? அது எப்படி வந்தது தெரியுமா?

1840ஆம் ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு தேர்தலில் மார்ட்டின் வேன் பர்ன் (Martin van buren) போட்டியிட்டுப் பிரச்சாரத்தில் சில வாக்குறுதிகளைக் கொடுத்து வெற்றுபெற்று அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவும் செய்தார். அதனால் மக்கள் அவரைச் செல்லமாக ஓல்ட் கிண்டர்குக்  (Old Kinderhook)  என்று அழைத்தனர். பின்னர் அவர் பெயரால் O.K. Club உருவானது. அன்றைய தினத்திலிருந்து ஒரு வேலையைச் சரியாக முடித்தால் OLL KORRECT  என்று உச்சரித்து Old Kinderhook என்ற வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்து நாளடைவில் OK என்று சுருக்கிவிட்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *