தலைவர்களுக்கு எடுத்துக்காட்டானவர்!

டிசம்பர் 1-15 2018

அன்புடையீர் வணக்கம்.

ஆர்.எஸ்.எஸ். சார்பில் ஆங்கிலத்தில் ‘RSS: A sage of courage and Dedication’  எனும் புத்தகத்தை, ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர்கள் தமிழகத்தில் பல துறைகளில் பணியாற்றும் தலைவர்களை சந்தித்து அவர்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்தப் புத்தகத்தின் பிரதி ஒன்றை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை  ஆர்.எஸ்.எஸ்.ஸின் வடதமிழகத் தலைவர் கே.குமாரசுவாமி, மக்கள் தொடர்பு பொறுப்பாளர்கள் ராம.ராஜசேகர், பிரகாஷ் ஆகியோர் திராவிடர் கழக தலைமை அலுவலகத்திற்குச் சென்று நேரில் சந்தித்து வழங்கினர்.

மாறுபட்ட கொள்கைகளை உடையவர் என்றபோதும் கி.வீரமணி அவர்களின் இனிமையான பேச்சு, அன்பான உபசரிப்பு, புறப்படும்போது வாசல்வரை வந்து வழி அனுப்பிய பண்பு ஆகியவை அந்தப் பொறுப்பாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஒரே குடும்பத்தில்கூட அண்ணன், தம்பி மாறுபட்ட வெவ்வேறு இயக்கங்களில் பணியாற்றலாம். அவரவர் கொள்கைகளில் உறுதியாக இருப்பது தவறு இல்லை. ஆனால், காழ்ப்புணர்ச்சியோ பகைமை உணர்வோ தேவையில்லை. இந்தப் புரிதல் அனைத்துத் தலைவர்களுக்கும் தொண்டர்களுக்கும் இருக்க வேண்டும்.

வாழி நலம் சூழ.

– ம.வீரபாகு, ஆசிரியர், விஜயபாரதம் (16.03.2018)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *