ரீஃபைண்ட் செய்யப்பட்ட அரிசிகளைச் சாப்பிடும்போது கார்போஹைட்ரேட் அதிகரித்து சர்க்கரையும் கூடுவதால் கெட்ட கொழுப்பும் அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகும்போது இன்சுலின் உடலில் சுரப்பது அதிகமானால் கெட்ட கொழுப்பு அதிகமாகும். சர்க்கரை உடலில் அதிகமானால் தேவைக்கு உடல் உறிஞ்சியது போக மீதியை கொழுப்பாக மாற்றி சேமித்துக் கொள்ளும். சர்க்கரை கொழுப்பாக மாறுவதால் ட்ரைகிளிசரைடின் அளவும் கூடுகிறது.
கொழுப்பைக் குறைக்க என்ன செய்யலாம்?
* நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
* நட்ஸ் வகைகள், பழங்கள் அதிக அளவில் சாப்பிடலாம்.
* கீரைகள், நார்ச்சத்துள்ள காய்வகைகள், கிழங்குவகைகள், வாழைத்துண்டு, வாழைப்பூ, நீர்க்காய்களான சௌசௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், பூசணிக்காய் எடுத்துக்கொள்ளலாம்.
* சூப் வகைகள், முழு தானியங்கள், பூண்டு, வெங்காயம், ஒமேகா 3 அதிகமுள்ள மீன் வகைகளை எடுத்துக் கொள்ளலாம்.
* குறைந்தபட்சம் 30 முதல் 40 நிமிடங்கள் நடைபயிற்சி அவசியம்.
* தினசரி உடலில் வெயில்படும்படி இருக்க வேண்டும்.
* ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பத் திரும்ப பயன்படுத்தக் கூடாது.
கொழுப்பு உடலுக்கு எத்தனை அவசியம்?
* நாம் சாப்பிடும் உணவை செரிக்கச் செய்து அதிலிருக்கும் சத்துக்களைப் பிரித்து உடலுக்கு அனுப்பும் வேலையைச் செய்கிறது.
* ஆண், பெண் செக்ஸ் ஹார்மோன்கள் ஈஸ்ட்ரோஜன், டெஸ்ட்ரோஜன் இயக்கத்திற்கு பெருமளவு துணை புரிகிறது.
* விட்டமின் டி உற்பத்திக்கு கொழுப்பு உதவுகிறது.
* ஒவ்வொரு உறுப்பும் பல செல்களால் ஆனவை. அந்த செல்களின் அடிப்படைக் கட்டமைப்பை எடுத்துச் செல்வதே கொழுப்புதான்.
* கார்டிசோல் என்கிற ஸ்ட்ரேஸ் ஹார்மோனுக்கு கொழுப்பே காரணமாக இருக்கிறது.
* மூளை செல்களப் பாதுகாக்கிறது.
நல்ல கொழுப்புள்ள உணவுகள்
நட்ஸ், விதைகள், ஆலிவ் ஆயில், பழங்கள் இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொழுப்பைக் குறைக்கும் மீன் உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதே நேரத்தில் உப்பைக் குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஆல்கஹால், புகையிலை தவிர்க்க வேண்டும்.
அதிக கொழுப்பு இருப்பவர்கள், நல்ல கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, எடையை சீராக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒருவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு யோகா, வாக்கிங், கார்டியோ எக்சர்சைஸ் என மாறுபடும்.
கொழுப்பு அதிகம் இருக்கும் மற்ற உணவுகள்
வெண்ணெய், நெய், மாமிச உணவுகள், சீஸ், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, தாய்ப்பால். குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். ஏனென்றால் அதில் கொழுப்பு மிக அதிகமாக இருக்கிறது.
மொத்த கொலஸ்ட்ரால் கணக்கீடு செய்யும்போது எல்.டி.எல்., ஹெச்.டி.எல்., ட்ரைகிளிசரைடு என மூன்று இருக்கும்.