மோடி திட்டத்தின் மோசடி!

டிசம்பர் 1-15 2018

59 நிமிடத்தில் 1 கோடி கடன் ஊழல் தெரியுமா?

கடன் விண்ணப்பத்தை பிராசஸ் செய்வதற்கு டெண்டர் மூலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது இந்த கேபிடாவெர்ல்ட் என்னும் நிறுவனம்.

1180 ரூபாய்நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளின் கடன் விண்ணப்பங்கள் விலைக்கு விற்கப்படுகின்றன. ஒவ்வொரு விண்ணப்பத்திலிருந்தும் கேபிடா வேர்ல்டுக்கு 1000 ரூபாய் கிடைக்கும்! அதுபோது, ஒரு வேளை கடன் வழங்கப்படுமானால் 0.35 சதவிகிதம் பிராசஸிங் கட்டணமும் கிடைக்கும்!

கடன் வழங்காவிட்டாலும்கூட பிராசஸிங் கட்டணம் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டும். ஆனால், இங்கே இந்தக் கட்டணம் ஒரு தனியார் நிறுவனத்துப் போகும்.

ஆனால், இந்த 59 நிமிட திட்டத்தில் கேபிடா நிறுவனத்துக்கு ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் 1000 ரூபாய் (ப்ளஸ் ஜிஎஸ்.டி) கிடைக்கும். ஆக, ஒனரு கோடி பேர் விண்ணப்பம் செய்தால், விண்ணப்பம் செய்தவர்களுக்குக் கடன் கிடைக்கிறதோ இல்லையோ, கேப்டா கம்பெனிக்கு ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.

அதாவது, மக்கள் பணத்தில் இயங்கும் பொதுத் துறை வங்கிகளிடமிருந்து மக்களுக்குத் தரப்படும் கடனுக்கு அந்த மக்களின் பணம், ஒரு தனியார் நிறுவனத்துக்குப் போகப் போகிறது.

ஒரு தனியார் நிறுவனத்துக்கு அதுவும் பிரைவேட் லிமிடெட் கம்பெனிக்கு (நிறுவனத்தின் பங்குகள் பொதுமக்களுக்கு வெளியிடப்படாது) அரசு ஏன் இந்தத் திடடத்தினைச் செயலாக்க வழங்க வேண்டும்?

2018 மார்ச் மாதம், இந்த நிறுவனத்தில் இயக்குனராகச் சேர்ந்திருப்பவர் அகில் ஹாண்டா. யார் இந்த அகில் ஹாண்டா? ஊழலின் நிழல்கூட படியாத அரசு எங்களுடையது என்று சொல்லும் பிரதமர் மோடியின் 2014 தேர்தலில் மோடியின் பிரசாரகர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *