நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன்!

டிசம்பர் 1-15 2018

சமூகநீதிக்கு ஆதரவான அனைவரும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அனைத்து சமூகநீதி ஆதரவாளர்களும் ஒன்றுசேர்ந்து இந்த மதவெறிச் சக்திகளின் சவாலை சந்திக்க வேண்டும். மதவெறிச் சக்திகளின் முக்கிய கேந்திரமாக விளங்கும் உத்தரபிரதேசத்தில் அவர்கள் முதுகெலும்பை நாம் முறித்தாக வேண்டும். மரியாதைக்குரிய சந்திரஜித் அவர்கள் நான் முன்னின்று நடத்த வேண்டும் எனக் கூறினார்கள். ஆனால், இது தனிமனிதனால் செய்யக்கூடிய காரியமல்ல. நண்பர் வீரமணி அவர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி அழைத்துச் செல்லும் ‘கொறடா’ ஆவார். அந்தத் தகுதி அவருக்குத்தான் உண்டு. எனவே, இனியும் காலம் தாழ்த்தாது நாம் அனைவரும் ஒன்றுபட்டு, செயல்பட வேண்டும்.

நான் திரு.வீரமணி அவர்களையும், அவரது இயக்கத்தவர்களையும் மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறேன். அவர்கள் சுயநலமற்ற தொண்டினைத் தரக்கூடியவர்கள்.

முன்னாள் பிரதமர் வி.பி.சிங் (டில்லி பெரியார் விழா – 19.9.1995)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *