சர்வ மதப் பிரார்த்தனையா?
-”ஊர் சுற்றி கவிராயர்”
1. ஏசுபெருமானே,
நீங்கள் ஒரே ஒரு சிலுவையில்
அறையப்பட்டீர்கள் – பிலாந்து மன்னனால்
இங்குள்ள கிறித்தவரான நாங்கள்
பன்னூறு சிலுவைகளில் நாளும் அறைப்படுகிறோம் – காவி ஆட்சியில்
மீண்டும் உயிர்த்தெழுவோமா – 2019இல்?
2. நபிகள் நாயகமே,
உங்களை மெக்காவிலிருந்து மெதினாவுக்கு
அறியாமையாளர்கள் கல்லால் அடித்துத் துரத்தினார்கள்
இன்று இஸ்லாமியர்களாகிய எங்களை பழைய
ஒடிந்த வில்லாலும் சொல்லாலும் அடித்து
விரட்டப் பார்க்கின்றனர்
விமோசனம் – 2019இல் தானா?
3. இந்துக்களே,
ஒன்று சேருங்கள் –
முஸ்லிம் கடைகளில் சாமான் வாங்காதீர்
– பலமாகக் கேட்கிறது இந்துத்துவாக்களின் குரல்!
உண்மையில் ஹிந்துக்கள் பலரும் ஜாதியை
ஒழிக்க ஒன்று சேரவில்லை
பிறகு… ஒன்று சேர்ந்தார் – டாஸ்மாக் கடைகள் முன்பு! சரியா?
காந்திக்கு காவிகளின் சாந்தி பஜனை
“ரகுபதி ராகவ ராஜாராம்
பதித்த பாவன சீத்தாராம்
ஈஸ்வர அல்லா தேரே நாம்
இவற்றை பஜனைக்காகவே பாடினோம் –
துப்பாக்கியைத் தேடினோம் – வெற்றியை நாடினோம்
மீண்டும் கூடினோம் – காந்தி பஜனைப் பாட!