Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

தப்புச் செடிகள்

மஞ்சை வசந்தன்

 

படித்த பெற்றோர்

பஞ்சணை மெத்தை

பருகிடச் சாரு

பள்ளிக்குக் காரு

வீட்டுக்கு வந்து

விளக்கிச் சொல்லிட

பாடத்திற் கொருவராய்

பலப்புல வாத்தியார்

பகட்டில் படித்தவர்

பாரில் எவரோ

அறிவில் சிறந்தார்?

 

சேற்றில் உழைத்து

 சோற்றைக் குழைத்த

அரைவயிற்றுக் கஞ்சி

அடமானக் காசு

ஆக்கிய மேதைகளே

அண்ணாக்கள்!

அப்துல் கலாம்கள்!

வைத்து வளர்த்த

வனப்புச் செடியினும்

தானே வளரும்

தப்புச் செடிகளே

தாராளமாய் காய்க்கின்றன!