சொந்த தொகுதிக்கும் துரோகம், தத்து எடுத்த கிராமத்திற்கும் துரோகம் & நயா பைசாக்கூட தத்து எடுத்த கிராமங்களுக்கு செலவழிக்காத மோடி பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வெளிவந்த உண்மை!
அனுப்புநர்: சிறீ அர்ஜூன் வர்மா, என்பவரின் கீழ்க்கண்ட கேள்விகளை ஸிஜிறி-2005 மூலம் கேட்டுள்ளார்.
கேள்வி: நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு தனது தொகுதியான வாரணாசியில் உள்ள ஜெயப்பூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.
1. இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனை கிராமத்தை தத்தெடுத்தார்?
2. தத்தெடுத்த கிராமத்திற்கு மோடி தனது நாடாளுமன்றத் தொகுதி நிதியிலிருது எவ்வளவு ரூபாய் ஒதுக்கினார்?
3. எவ்வகையான புதிய திட்டங்களுக்கு மத்திய நிதித்துறையிட மிருந்து நிதி பெற்றுத் தந்தார்? அவ்வாறு நடந்து முடிந்த திட்டங்கள் எத்தனை, அதற்கான நிதி எவ்வளவு?
இந்தக் கேள்விகளுக்கு வாரணாசி மாவட்ட கிராம வளர்ச்சி நிர்வாக அதிகாரி அளித்துள்ள பதில்.
பதில்: மதிப்பிற்குரிய பிரதமர்
1. 7.11.2014 முதல் 16.2.2016 வரை தொகுதியில் (வாரணாசி) உள்ள ஜெயப்பூர் என்ற கிராமத்தைத் தத்தெடுத்தார்.
2. 16.2.2016 முதல் 23.10.2017 வரை நாகேபூர் என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.
3. 23.10.2017 முதல் காகரியா என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.
4. 6.4.2018 முதல் டோமரி என்ற கிராமத்தை தத்தெடுத்தார்.
இந்த கிராமங்களுக்கு இதுவரை பிரதமர் நிதியிலிருந்து எந்த ஒரு தொகையும் எங்களுக்கு வரவில்லை.