விநாயகனின் ஊர்தி எலியை இன்று முதல் கொல்ல மாட்டோம் என்று முடிவு செய்து இவ்விழாவைக் கொண்டாடுங்கள். எலி என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளவேண்டும். எலிப் பொறி வைத்துக் கொல்லக் கூடாது.
– இனியதமிழ் 01.09.2011 காலை 10:36 மணி
என்னங்க அநியாயம் இது. அன்னாஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தரலைங்கிறதுக்காக ஒரு மாணவனைத் துரத்தித் துரத்திக் கல்லால் அடித்து, கூவத்தில் முழ்கடித்துக் கொல்றாங்கன்னா…. எனக்கு குஜராத் கலவரம்தான் நினைவுக்கு வருகிறது….அது சரி… இவன்களும் “பாரத் மாதாகீ ஜெய்..” கோஷ்டிகள் தானே…..?
– பாரதிவாசன் 31.08.2011 மாலை 5:20 மணி
கடந்த 10 நாட்களாக மூவரின் தூக்குத் தண்டனை விவகாரத்தில் தினமலரின் நிலைப்பாட்டினை உன்னிப்பாகக் கவனித்து மனம் நொந்து, வெந்து சொல்கிறேன். மது அருந்துவது நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவுக்கு உண்மை தினமலர் படிப்பது தமிழனுக்கும், தமிழ்நாட்டுக்கும், தமிழ் உணர்வுக்கும் கேடு என்பது.
– ராஜேஷ் தீனா 02.09.2011 இரவு 7:55 மணி
தோழர்.தா.பாண்டியன் என்றழைக்கப்படும் ரத்தத்தின் ரத்தம். தா.பா, ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயரிட்டிருப்பதாக தகவல் வந்துள்ளது.
இனி பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள், குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது, சந்தியா, ஜெயராமன், ராமச்சந்திரன், டாடா, பிர்லா, பஜாஜ், கோயங்கா, அம்பானி போன்ற மக்கள் மனதில் இடம்பிடித்தவர்களின் பெயர்களை வைக்கலாம். அவ்வளவு ஏன், மார்க்ஸின், பொதுவுடைமைக் கருத்துக்கும் கீதையில் கிருஷ்ணன் சொல்லியிருக்கும், எதை கொண்டுவந்தாய் நீ இழப்பதற்கும் உள்ள ஒற்றுமை குறித்து மேடையிலேயே பேசலாம்.
– – திராவிடபுரட்சி 04.09.2011 பகல் 2:55 மணி
சரித்திரத்தில் ஒருபோதும் இந்தியாவோடு ஒட்டியிராத, மற்ற இஸ்லாமியர்களிடமிருந்துகூட தனித்து நிற்கும் கலாச்சாரத்தைக் கொண்டதுமான காஷ்மீரை அபகரிப்பதும், எதிர்ப்பவர்களைத் தீவிரவாதிகள் என்பதும் எருமை மாட்டைக் கட்டி வைத்து புலி என்று ஒத்துக்கொள் என்று அடித்த போலீஸ்காரன் கதைதான் நினைவுக்கு வருகிறது!
— கிருஷ்ணா தமிழ் டைகர் 06–.09.2011 மாலை 4:06 மணி
ஆங்கில ஊடகங்கள் எல்லாமே தூக்குத் தண்டனை விதிக்கப்பெற்ற மூவரையும் ஸிகியிமிக்ஷி ரிமிலிலிணிஸிஷி என்றே அழைப்பது எரிச்சலூட்டுகிறது. #திருந்துங்கடா டேய் காந்திகில்லர்ஸ் வாழற நாடு இது!
– அதிஷா வினோ 31.08.2011 காலை 11:30 மணி
வாளும் வடிவேலும் வாய்த்த வெடிகுண்டும்
நாளும் உயிர் குடிக்க நான் தருவேன் – நீளும்கை
பொங்கும் எரிமுகத்துப் பூதக் கணபதியே
எங்கும் கலவரத்தைத் தா!
– பரணீதரன் கலியபெருமாள் 30.08.2011 இரவு 9 மணி
மும்பையின் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜ விநாயகர் சிலைக்கு ரூ 14 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட் டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 300 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-பத்திரிகைச் செய்தி
எப்படிப் பகுத்தறிவோடு செயல்படுகிறார்கள்…. இதைத் தானே நாங்களும் சொல்லுறோம், அதை நம்பாதே என்று! கடவுள் மேல நம்பிக்கை இல்லாமல், இன்சூரன்ஸ்காரன், காவல் துறை அதிகாரிகள் மேல நம்பிக்கை வைத்து இவர்களால்தான் உங்கள் இழப்பீடு சரிசெய்யப்படும் என்று தெரிகிறதே! இதுதானே பகுத்தறிவு…!
– பரணீதரன் கலியபெருமாள் 01.09.2011 இரவு 8:34 மணி
“Glucon-D– விளம்பரப் படம்!!”
“அண்ணா ஹசாரேயின் 12- நாள் உண்ணாவிரத ரகசியம்..!”
– ராஜேஷ்குமார் 01.09.2011 பகல் 12:30 மணி