ஆசிரியர் பதில்கள்

செப்டம்பர் 1-15

வந்தேறிகளின் வேட்டைக் காடாகக் கூடாது தமிழகம்!

கே :    மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் கடைமடை பாசனத்திற்கு தண்ணீர் வராமைக்கு காரணம் என்ன?

– அ.சீலன், காரமடைவந்தேறிகளின் வேட்டைக் காடாகக் கூடாது தமிழகம்!

ப :    இயற்கை உதவும் வகையில் மழை பொழிந்தது; முன்கூட்டியே சரியான வகையில், தூர்வாரிடும் பணியை கடைமடை வரை செய்திருந்தால் இந்த அவலம் _ கடைமடை விவசாயிகளுக்கு வேதனையும் துயரமும் ஏற்பட்டிருக்காது. அனைத்துக் கட்சி குழு போட்டு கண்காணித்து பருவ மழை துவங்கும் முன்பே இப்பணியை நடத்தாதது அரசின் தவறு _ செயலின்மை ஆகும்!

கே :    கல்லூரி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதித்தும் பிறகு அதனைத் திரும்பப் பெற்றும் கல்வித் துறையால் எடுக்கப்பட்ட குழப்பமான முடிவு எதைக் காட்டுகிது?

– ஆர்.ரஞ்சனி, நாமக்கல்

ப :    முதல் முடிவு சரியானது; திரும்பப் பெற்றது தவறான முடிவு.

    எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

    எண்ணுவம் என்பது இழுக்கு. (குறள் எண்:467)

கே :    என்ஜினியரிங் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதற்குக் காரணம் என்ன?

– சி.ரகுபதி, காஞ்சிபுரம்

ப :    அமெரிக்கா போன்ற வெளிநாட்டு வேலைகளை நம்பியே என்ஜினியரிங் கல்லூரிகளில் சேரும் போக்கு தவறான கருத்து. நம் நாட்டில் தொழிற்சாலை பெருகினால் சாலை, மற்றும் கட்டடப் பணிகள் தொய்வின்றி நடந்திடும். நிச்சயம் வேலைவாய்ப்புப் பெருகும். மற்ற படிப்பில்கூட வேலை கிட்டாது இருப்பவர்கள் உள்ளனரே. அதற்காக படிக்காமலா இருக்கிறார்கள்? தெளிவுபடுத்த வேண்டியவர்கள் அதைச் செய்யத் தவறுகிறார்கள்.

கே :    கவிஞர் மனுஷ்யபுத்திரனின் கவிதை இந்துக் கடவுளுக்கு எதிரானது என்று அவருக்கு மிரட்டல் விடுப்பது பற்றி தங்கள் கருத்து என்ன?

– எஸ்.ரவிச்சந்திரன், குறிஞ்சிப்பாடி

ப :    கண்டித்து 22.8.2018 ‘விடுதலை’யில் வந்துள்ள அறிக்கையைப் படியுங்கள்!

கே :    ‘நீட்’ தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே என்று மத்திய அரசு அறிவித்துள்ளது ஏன்?

– எம்.ரேஷ்மா, சிதம்பரம்

ப :    ‘நீட்’ தேர்வை ஒழிப்பதுதான் நமது இலக்கு _ போராடி வெற்றி பெறுவோம்!

கே :    “காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா – பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறியிருப்பது பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

– பா.குணசேகரன், சமயபுரம்

ப :    பேச்சு வார்த்தையால் புதிய தலைமைக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பது நல்லதுதானே! எந்த அண்டை நாடும் சுமூக உறவுடன் இருப்பது நல்லதே!

கே :    இந்திய அரசாங்கம் கேரளாவிற்குக் கொடுத்தது ரூ.600 கோடி. அயல்நாடான அய்க்கிய அரபு எம்ரேட் கொடுத்தது ரூ.700 கோடி! இது எதைக் காட்டுகிறது?

– பி.எழிலன், மாயவரம்

ப :    வெளிநாட்டு உதவி ஏற்கப்படுமா என்பது சந்தேகம். அவர்களது நல்ல மனம் பாராட்டத் தகுந்தது! ‘தேசிய பேரிடர்’ என்று அறிவித்து அதற்கேற்ப மத்திய அரசு உதவிட வேண்டும்!

கே :     எதிரிகளும், துரோகிகளும் தி.மு.க.வை மட்டும் முழு மூச்சாய் எதிர்க்கக் காரணம்?

– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப :    அது ஒன்றுதானே தீவிரமான இன உணர்வு, பகுத்தறிவு, சமூக நீதிக்கான ஒரு அரசியல் கட்சி _ பலம் வாய்ந்ததும்கூட _ அதை பலவீனப்படுத்திட முயற்சிகள் நடைபெறுகின்றன.

கே :     வந்தேறிகளின் வேட்டைக்காடாக தமிழகம் மாறி வருவதுத் தடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைப் பற்றி தங்கள் கருத்து என்ன?

– ஈ.வெ.ரா.தமிழன், சீர்காழி

ப :    துவக்கத்திலிருந்தே தொடர்ந்து கூறி வருபவர்கள் நாம்தான் _ இப்போதுதான் கூறுபவர்கள் அல்லவே!

கே :     “கேரள வெள்ள பாதிப்புக்குக் காரணம் அய்யப்பனின் ஆத்திரம்!” என்று குருமூர்த்தி அய்யர் கூறியுள்ளதற்கு தங்கள் பதில்?

– க.குமாரவேல், திண்டிவனம்

ப :    கருஞ்சட்டை கடிதம் (19.8.2018) காண்க. எனது பெரியார் திடல் உரையையும் படிக்கவும்.    


மின்னணு மெழுகுவர்த்தி

விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளை அலங்கரிக்கும் வகையில் மின்னணு மெழுகுவர்த்தியை அறிமுகம் செய்திருக்கிறது கலிபோர்னியாவின் லுயூடெலா நிறுவனம். ஜாஸ்மின், ஆப்பிள் சிடார் போன்ற பல்வேறு நறுமணங்களில் கிடைக்கிறது. எவ்வளவு நேரம் எரிய வேண்டும் என்பதை தேர்ந்தெடுக்கும் வசதியும் உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *