கல்வித் துறையில் காவிகளின் பயங்கரவாதத்தை விளக்கும் நூல்கள்

ஜூலை 16-31
 

மக்களுக்குத் தீமை விளைவிக்கும் எந்தக் கருத்தையும் துணிவுடன் எதிர்த்துப் பிரச்சாரம் செய்து முறியடிக்கும் இயக்கம் திராவிடர் கழகம். எந்தப் பிரச்சினையினாலும் அதன் வேர்வரைச் சென்று ஆராய்ச்சி செய்து அனைத்து உண்மைகளையும் எளிய நடையில் எல்லா மக்களுக்கும் செல்லும் வகையில் மலிவு புத்தகங்களாக்கிக் கொண்டு போய்ச் சேர்ப்பது திராவிடர் கழகத்தின் மகத்தான மற்றும் தனித்துவம் வாய்ந்த பணியாகும்.

அந்த வகையில் 2014ஆம் ஆண்டு முதல் மத்திய (ஆர்.எஸ்.எஸ்.) அரசின் இந்துத்துவ கல்வித் திணிப்பை தோலுரிக்கும் வகையில் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள புதிய நூல்கள் பற்றிய அறிமுகம்.

1.                     புதிய கல்விக் கொள்கையா?   நவீனக் குலக்கல்வித் திட்டமா?

                        மத்திய பாரதிய ஜனதா அரசு வெளியிட்ட ‘புதிய கல்விக் கொள்கை – 2016’க்கான வரைவு அறிக்கையை ஆய்வு செய்து எழுதப்பட்ட நூல்.

                        தனி மனிதனின் கல்வி உரிமையை, இக்கொள்கை எவ்வாறு மாநில உரிமைகளைப் பறிக்கிறது என்பதை விளக்கும் நூல்.

2.                     ‘நீட்’ தேர்வு கூடாது – ஏன்?38.jpg - 59.11 KB

                        ஒரே ‘நீட்’ நுழைவுத் தேர்வு இந்தியா முழுமைக்கும் ஏன் நடத்தப்படக் கூடாது என்பதை விளக்கும் நூல்.

                        நாடு முழுவதும் பள்ளிகளில் ஒரே கட்டமைப்பு இல்லை, ஒரே பாடத்திட்டம் இல்லை, ஒரே மொழி இல்லை, ஒரே மாதிரியான பயிற்சி மய்யங்கள் இல்லை, பொருளாதார சமத்துவ நிலை இல்லை. ஆனால், ‘நீட்’ தேர்வு மட்டும் ஒன்றாக வைப்பது நியாயமா? என வினா எழுப்பும் நூல்.

3.                     ‘நீட்’ தேர்வு அவலங்கள்

2017, 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ‘நீட்’தேர்வில் நடந்த மோசடிகளையும், அவலங்களையும் விளக்கும் நூல்.

                        சோதனை என்ற பெயரால் மாணவர்களை மன உளச்சலை உண்டாக்கி பதற்றத்துடன் தேர்வு அறைக்கு அனுப்பியமை, தேசிய அளவில் ஒரே தேர்வு என்று கூறி ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு வினாத்தாள்களைக் கொடுத்த

மோசடி. இந்தாண்டு மட்டும் விலக்குத் தருகிறோம் என்று கடைசிவரை நம்பவைத்து கழுத்தை அறுத்த மத்திய அரசின் துரோகம், ‘நீட்’ தேர்வால் தமது மருத்துவர் கனவு கலைந்து போனதால் மரணத்தைத் தழுவிய ஒடுக்கப்பட்ட மாணவிகள், தமிழ்நாட்டு மாநிலப் பாடத் திட்டங்களில் படித்த மாணவர்கள் இழந்த மருத்துவ இடங்கள் ஆகியவற்றை விளக்கும் நூல்.

4.                     குருகுலக் கல்வியா?

சமஸ்கிருத படையெடுப்பா?

                        ஆர்.எஸ்.ஸின் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக உள்ள குலக்கல்வித் திட்டத்தைவிட மோசமான குருகுலக் கல்வி முறையை விளக்கம் நூல்.

                        நமக்கு சமஸ்கிருத இலக்கணம் தெரியும் என்று ஒரு மாணவன் தமக்குத்தானே சான்றிதழ் அளித்தால் நேரடியாக பத்தாம் வகுப்பு எழுதலாம் என்னும், கேலிக்கூத்தை அரங்கேற்றும் இக்கல்வித் திட்டத்தின் சூழ்ச்சிகளை விளக்கும் நூல்.

                        சமஸ்கிருத ஆதிக்கத்தைக் கொண்டுவரவும், பார்ப்பனிய மேலாதிக்க பண்டிதர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவுமே இக்கல்வி பயன்படும் என்பதை விளக்கும் நூல்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *