சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்

ஜூலை 01-15

 நூல்: ‘அறியப்படாத தமிழ்மொழி’

ஆசிரியர்: முனைவர்.கண்ணபிரான்   இரவிசங்கர்

வெளியீடு: ‘தடாகம்’, 112, திருவள்ளுவர் வீதி, திருவான்மியூர், சென்னை-41

தொலைபேசி:+91-44-43100442 | +91-8939967179

www.thadagam.com | info@thadagam.com
buy online: www.panuval.com/aptm

விலை:ரூ.250/- பக்கங்கள்: 280

 

வடார்க்காடு மாவட்ட மரபில் தோன்றி, தென் தமிழக/ஈழ மரபுகளில் ஆழ ஊன்றி, சிங்கை முதலான கீழை நாடுகள், அய்ரோப்பிய நாடுகள், அமெரிக்கக் கண்டங்களில் பரவலான பயணம் செய்து வருவதால், ஆங்காங்குள்ள மொழி மரபுகளைத் தமிழோடு ஒப்புநோக்கலும், மொழி வேர்ச்சொல் ஆய்தலும் இவர் நனி விருப்பம்.

தொழில்நுட்பம் பயின்று வங்கியியலில் பணியாற்றி வரினும், UC Berkeley–இல் தமிழியல் முனைவர் பட்டமும் பெற்று, பகுதி நேரப் பேராசிரியராகவும் வலம் வருபவர்.

தமிழ் மட்டுமன்றி வடமொழியும் (சம்ஸ்கிருதம்) பயின்றமையால், இரு வேறு மரபியல் நுனித்து வேறுபடுத்திக் காட்ட வல்லவர். சாம வேதம்/சாந்தோக்ய உபநிடதப் பாடம் வல்லார். சமணம், பவுத்தம், கிறித்தவம்,  இசுலாம் உள்ளடக்கிய தமிழின் பக்தி இலக்கியத்தை ஆழ வாசித்து, ஆழ்வார் அருளிச் செயலும், நாயன்மார் நற்றமிழ்த் தேவாரங்களும், இராமானுச மரபுகளும், திராவிட/தமிழ் இயக்க வரலாறும் நனி பயின்றவர்.

துக்கடா – 3: திராவிடமா? தமிழா?

தமிழா? திராவிடமா? = இது அண்மைக் காலங்களில் எழுந்த / எழுப்பப்பட்ட ஒரு விவாதம். ஆனால், இதற்கு முன்பே பலப்பல தமிழறிஞர்களால் பேசப்பட்டுள்ளது.

1.                     தமிழறிஞர் என்று தானே சொல்கிறோம்? திராவிட அறிஞர் என்று சொல்வதில்லையே? பிறகு எதற்கய்யா திராவிடம்?

2.                     திராவிடம் என்ற சொல், சங்கத் தமிழில் ஓர் இடத்தில் கூட இல்லையே?

3.                     திராவிடம் = சமஸ்கிருதச் சொல் தானே? போயும் போயும் சமஸ்கிருதப் பேர் வைத்துக் கொண்டா, ஒரு தமிழ் இயக்கம் இயங்க வேணும்?

4.                     திராவிடம் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லவா? அதான் மொழிகள் பிரிந்து விட்டனவே? இனிமேல் எதற்கு திராவிடம்?

5.                     கால்டுவெல் எனும் ஆங்கிலேயே அறிஞர் உருவாக்கிய சொல் தானே திராவிடம்? ஓர் ஆங்கிலேயரின் சொல், தமிழுக்கு எதற்கு?

6.                     திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஆண்டு, ஊழல் மலிந்து விட்டதோ? திராவிடம் என்ற பேரை ஒழித்தால், ஊழல் ஒழிந்துவிடும் அல்லவா?

இவ்வாறெல்லாம் கேட்டிருப்பீர்கள். இன்று விடைகாணப் போகிறோம், வாங்க! கவலைப்படாதீங்க. உங்களைப் போலவே நானும் பலமுறை குழம்பியுள்ளேன் பின்பு தெள்ளிதின் தெளிந்துள்ளேன்! செய்ய தமிழ் மாலைகள் யாம் தெளிய ஓதி, தெளியாத நிலங்கள் தெளியலாம், வாங்க!

மொழிஞாயிறு பாவாணரின் ஆகச் சிறப்பான நூல் = ‘திராவிடத் தாய்!’

தமிழா? திராவிடமா? எனும் இருட்டறைக்கு, அந்நூல் நல்லதொரு விளக்கு! அந்த விளக்கு + அறிவியல் விளக்கு, இரண்டும் கைக்கொண்டு பயணிப்போம், வாங்க!

இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்

(பிங்கல நிகண்டு)

தமிழ் என்ற சொல்லுக்குப் பொருள் = இனிமை/நீர்மை;

·                      தமிழ் என்பதே நம் மொழியின் சொல்

·                      தமிழ் என்பதே நம் இனத்தின்/பண்பாட்டின் சொல்

ஆனால் உலகில், தமிழ் மட்டுமே ஒரேயொரு மொழி/இனம் அல்ல! உலகம் பரந்தது; வேறுபட்ட மொழி/இன/பண்பாடுகளை உள்ளடக்கியது. அந்தப் பரந்த வையத்தில்… 2500 + ஆண்டுகட்கும் முன்பே, பிற மொழி/இன/நிலங்களில் கூட, தமிழ் நிலைநின்றது _- வணிகத்தால், பண்பாட்டால், சமுதாய ஆற்றலால்!

·                      கப்பல், நாவாய், கலம்.. கடல் -_ ஆளுமை

·                      மிளகு, நெல், கமுகு.. பயிர் _- ஆளுமை

·                      துகில், தூவி, சல்லடம்.. உடை _- ஆளுமை

·                      ஆனால் தன் ஆளுமையைப் பிற பண்பாடுகளில் திணிக்காத அற – ஆளுமை!

சேர / பாண்டிய கடல் வணிகம், கொடிகட்டிப் பறந்த காலத்தே.. தமிழ் என்று நம் சிறப்பு ‘ழ’கரத்தை ஒலிக்கவியலாத, நம் நட்பு இனங்களால், தமிழுக்கு, இன்னொரு பெயரும் கிடைத்தது; அதுவே திராவிடம்!

திராவிடம், சங்கத் தமிழில் இருக்குமா? = இருக்காது!

நமக்குத் தான் ‘ழ’கரம் நல்லா வருமே? நாம ஏன் திராவிடம் என்று சொல்லப் போறோம்? ஆனால் உலக அரங்கின் தொன்மையான நூல்களில், திராவிடம் இருக்கும்! என்னவாக? திராவிடம் = தமிழாக இருக்கும்! அது தமிழையே குறிக்கும்!

இது உலகெங்கும் இருக்கும் வழக்கமே!

·                      சீனம் = நாம்; Zhongguo (China)= அவர்கள்

·                      யவனம் = நாம்; lonian/Graikoi (Greek)= அவர்கள்

·                      கடாரம் = நாம்;Kedah (Malaysia)= அவர்கள்

·                      சாவகம் = நாம்; Java (Indonesia) = அவர்கள்

·                      Farsi = நாம்; Parsa (Persian) = அவர்கள்

போலவே.. திரமிடம்/ திராவிடம் = அவர்கள்; தமிழம் / தமிழகம் = நாம்!

ஜஹோன் என்று நமக்கு வாயில் வரவில்லை; தமிழில் அதற்கு எழுத்தும் இல்லை; அதனால் சற்றே நெருக்கமான ஒலிப்பு = சீன்; சீனம்! இன்று சிலீவீஸீணீ என்றே உலக அளவில் ஆகி விட்டது. அட, அவர்களே Peoples Republic of China என்று தான் புழங்குகிறார்கள். ஞீலீஷீஸீரீலீuஷீ என்பதே ஆதி! சீன அரசு, இரண்டுமே புழங்குகிறது.

தமிழ் மொழி, கூடுமானவரை மூலமொழி ஒலிப்பை மதிக்கும்; இயலாத போதே, தன் மொழியமைப்புக்கு ஏற்றவாறு, சற்றே மாற்றியமைப்பு செய்யும். ஆங்கிலம் போல், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றெல்லாம் தமிழ் மாற்றாது.

Yeshua என்ற மூலமொழி பிமீதீக்ஷீமீஷ்-வை மீறி, என்று ஆக்கியது ஆங்கிலம்! (கிரேக்க Hebrew ஒட்டி), ஆனால் தமிழில் இன்றும் இயேசு தான்; மூலமொழிக்கு நெருக்கமாய்!

·                      English என்பதை ஆங்கிலம் என்று எழுதுவதே, மூலமொழிக்கு நெருக்கமாகத் தான்

·                     Anglian Dialect = Anglo Saxon= ஆதி குடிப்பெயர்; தமிழில் கிஸீரீறீவீணீஸீ = ஆங்கிலம்!

·                      இன்றைய Malaysia,, அன்று Kedah; அதனால் கெடாரம்; கடாரம்!

·                      இன்றைய Greece,, அன்று ஆதிகுடி = loniam;; அதனால், யவனம்!

·                      அதே என்று மாறின போது, யவனம் என்பது கிரேக்கம் ஆனது.

இதற்கு ndonym/Exonym  என்று இலக்கணம் உண்டு!

Endonym = மூல மொழியில் வழங்கும் ஒலிப்பு/பெயர்

Exonym= உலகம் வழங்கும் ஒலிப்பு/பெயர்

தமிழ் இலக்கணத்தில், இதைத் திசைச் சொல் என்று சற்றேறக்குறைய சொல்வோம். தொல்காப்பியரே இத்திசைச்சொல் பற்றிப் பேசுகிறார்.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்

தம் குறிப்பினவே ‘திசைச்சொல்’ கிளவி

(தொல்காப்பியம், எச்சவியல் 4)

செந்தமிழ் நாட்டோடு சேர்ந்த, பிற பன்னிரு நிலங்களில்/திசை நாடுகளில், திசை நாட்டார்கள் வழங்கும் சொல் = திசைச்சொல்! அதற்காக அவிங்க மொழியில் உள்ள எல்லாச் சொல்லுமே, தமிழுக்குள் வந்து திசைச் சொல் ஆகிவிடாது; தமிழ் சார்ந்த தொடர்புகளில் அவர்கள் பயன்படுத்தும் சொல் மட்டுமே திசைச்சொல்!

சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக், குடகம்,

கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம், வங்கம்,

கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம்,

தங்கும் புகழ்த் தமிழ்சூழ் பதினேழ்நிலம் தாம் இவையே

(மயிலை நாதர் மேற்கொள்)

நிலம் சார்ந்த சொற்கள் = 4 வகை:

1.                     இயற் சொல் = தமிழகத்திலேயே பேசும் நல்ல தமிழ்!

2.                     திரி சொல் = தமிழகத்தில் திரிந்து பேசுவன; வட்டார வழக்கு!

3.                     திசைச் சொல் = தமிழுக்குத் தொடர்புடைய, பிற திசைச் சொற்கள்!

4.                     வடசொல் = தமிழ் நிலத்தில், அரசியல்/மத மாற்றங்களால் வந்து குந்தியுள்ள வடசொற்கள் (சமஸ்கிருதம் _ பாலி இரண்டுமே)

தமிழ் மொழிக்குள், வடசொல் என்றே தனி இலக்கணம் வகுத்து, தெய்வ மொழியாம் சமஸ்கிருதம் போற்றுகிறார் தொல்காப்பியர் என்று திரித்துப் பொய் சொல்வார்கள் சிலர். அல்ல! அடுத்த வரியும் சேர்த்தே படியுங்கள்..

வடசொல் கிளவி வட எழுத்து ஒரீஇ

எழுத்தோடு புணர்ந்த சொல் ஆகும்மே

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்

(தொல்காப்பியம், எச்சவியல் 5,6)

வடசொல்லை, தமிழில் எழுத வேண்டிய கட்டாயம் வந்தால், வட எழுத்துக்களை (கிரந்த) ஒரீஇ! ஒதுக்குங்கள்! தமிழில் என்ன எழுத்து இருக்கோ, அதற்கு ஒத்து (புணர்ந்து) வந்தால் மட்டுமே, பயன்படுத்துங்கள்; வடமொழியில் சிதைந்தாலும் பரவாயில்லை; அதற்கு இயைந்து போகாதே! இயைந்தன வரையாதே!

இதற்குப் பெயர் தான் நெத்தியடி! பிற திசைச் சொல்லுக்கு இப்படிச் சொல்கிறாரா தொல்காப்பியர்? இல்லையே! வடசொல்லுக்கு மட்டும் ஏன் இப்படி, ஒதுக்கு/இயையாதே என்றெல்லாம் சொல்லி அபாய மணி அடிக்கின்றார்?

தமிழ் தொடர்பான பிற திசைச் சொற்களில், வேற எழுத்துக்களை ஒதுக்கு; அது சிதைந்தாலும் பரவாயில்லை; அது கிட்ட போய் நீ இயையாதே என்றெல்லாம் சொல்லாதவர், வடசொல்லுக்கு மட்டும் ஏன் இத்தனை Caution? விழிப்புணர்வு?

ஏனென்றால், அன்று தமிழ் நிலத்தில்.. அரசியல்/மதச் சூழல் அப்படி! முந்தைய கட்டுரை _ தமிழ் மறைப்பு அதிகாரம் _- அதிலேயே பார்த்தோம்ல? அரசன் மூலமாகப் புதுப்புதுப் பரவல்கள்; அதனால் தமிழ் மொழிக்கு ஊறு வந்துவிடக் கூடாது! என்பதால் இந்த Special
Mention!

¨                     திசைச் சொல் = நலமே! றிணீக்ஷீணீsவீtமீ போல் உறிஞ்சி விடாது; அதுவும் தமிழ் தொடர்பானவை மட்டுமே! குறைந்த எண்ணிக்கையில்.

¨                     வடசொல்லே = மிகு மிகு கவனம் தேவை, Parasite போல் உறிஞ்சி விடும்! பல்கிப் பெருத்து, பெரிய எண்ணிக்கை ஆகி, தமிழையே மறைத்துவிடும்

பண்பாடுகள் பரிமாறிக் கொள்வது இயல்பே! மொழிகளின் கொடுக்கல் வாங்கல் இயல்பே! ஆனால் அது மதிப்புடன்/ மானத்துடன் கூடிய கொடுக்கல்+வாங்கலாக இருக்க வேண்டும்; ளிஸீமீ sவீபீமீபீ-ஆக மட்டுமே இருக்கக் கூடாது; இல்லாத சொற்களைக் கடன் பெறலாம்; இருக்கும் சொற்களையே மறைத்து அழித்து விடக்கூடாது! Parasite போல் உறிஞ்சி விடக்கூடாது.

நாம், மீண்டும் Exonym /திசைச் சொல்லுக்கு வருவோம்!

·                      யவனம் = திசைச் சொல்,loniam என்ற சொல்லுக்கு;

·                      திராவிடம் = திசைச் சொல், தமிழம் என்ற சொல்லுக்கு

திராவிடம் = சமஸ்கிருதச் சொல்லாமே? இன்று சிலர் சொல்கிறார்களே? அல்ல! வாங்க, அதையும் பார்த்து விடுவோம்; திராவிடம் = உலகச் சொல்! Exonym!

கிரேக்க மொழியில் தொன்ம ஆவணம் =Periplus of the Erythraean Sea (Red Sea)

இந்த ஆவணத்தின் காலம்:1st CE;; அன்றைய கடல் வழி வணிகம் பேசும் நூல்; எரித்ரேயன் கடல் (இன்றைய செங்கடல்) வாணிப வழிகளைப் பேசும் போது, இந்திய நாட்டின் தென்மேற்குக் கரை.. சேரனையும் குறிக்கிறது இந்நூல்.

சேரனின் முசிறிப் பட்டினத்தில் இருந்து, உரோமாபுரி கொள்ளும் மிளகு, இலவங்கப் பட்டை முதலான மணக்காரம் (Spice)) வணிகம் பேசும் இந்த ஆவணம், ‘தமிழகம்’ என்பதை Damirica/Dravida என்றே குறிக்கின்றது! தொண்டி = Tyndis,  முசிறி = Muziris தமிழகம் =Damirica எனும் முழு ஆவணத்தை வாசியுங்கள்; இதோ!

“Then come Naura (kannur) and Tyndis, the first markets of Damiria (Dravida) and then Muziris and Nelcynda, which are now of leading importance.

Tyndis is of the kingdom of Cerobothra; it is a village in plain sight by the sea. Muziris of the same kingdom, abounds in ships sent there, with cargoes from Arabia, and by the Greeks; It is located on a river (River Periyar), distant from Tyndis by river and sea, five hundred stadia, and up the river from the shore, twenty stadia. Nelcynda is distant from Muziris by river and sea, about five hundred stadia, and is of another kingdom, the Pandian. This place also is situated on a river, about one hundred and twenty stadia from the sea.

There is another place at the mouth of this river, the village of Bacare; to which ships drop down on the outward voyage from Nelcynda, and anchor in the roadstead, to take on their cargoes; because the river is full of shoals and the channels are not clear. The kings of both these market-towns live in the interior.

(Notes: Damirica means the country of the Tamils, that is, the Southern Dravidians as they existed in the first century, including particularly the Chera, Pandya and Chola kingdoms)”

The periplus of the Erythraean Sea, 53-54-55; Translated from Greek & annotated by WILFRED H. SCHOFF, Secretary if Commercial Museum, Philadelphia. The original book is in Cornell

University Library, New York

 

இந்தக் கிரேக்க ஆவணத்திலிருந்தே அறியலாம், திராவிடம் = சம்ஸ்கிருதச் சொல் அல்ல! கிரேக்கம், உரோமானிய, எகிப்து நாடுகளில் கூட வழங்கிய சொல்!

தமிழகம் = Damiricaஆவது போலவே

தமிழம் = Dramidam/Dravidam ஆனது;

(அடுத்த இதழில்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *