தேர்வு எழுத வேண்டுமானால் பள்ளிக்கு இத்தனை சதவிகித நாள்கள் வந்திருக்கவேண்டும் என்பது விதி. ஆனால், ‘நீட்’ தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மதிப்பெண் பெற்ற பிகார் மாணவி பள்ளிக்குச் செல்லாமலேயே, குறைந்தபட்ச வருகையில்லாமலேயே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளார். பிளஸ் டூ படிக்கும் பிகாரைச் சேர்ந்த அந்த மாணவி, அந்தக் காலகட்டத்தில் – பள்ளிக்குச் செல்லாமல் டில்லியில் தங்கி ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியைப் பெற்றுள்ளார் என்பது அடிகோடிட்டுக் கவனிக்கத்தக்கது.
இதுகுறித்துத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டபோது, இந்த ஆண்டுமுதல் அந்த விதி மாற்றப்பட்டுள்ளதாம். எப்படி இருக்கிறது? ஒரு மாணவிக்காகவே விதியை அரசு திருத்தியுள்ளது என்றால், இது எத்தகைய மோசடி!
தகவல் அறியும் சட்டத்தின்கீழ்
கேட்கப்பட்ட கேள்வியும் – பதிலும்!
இதன் தமிழாக்கம்
கேள்வி: இண்டர்மீடியேட் (12ஆம் வகுப்பு) தேர்வு எழுத குறைந்தபட்ச வருகைப் பதிவு அவசியமா?
மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அளித்த பதில்: பிகார் மாநில பள்ளிக் கல்வித்துறை தேர்வுகள் எழுத வருகைப் பதிவேடு குறைந்தபட்ச விதிமுறை என்பது அவசியமல்ல. இந்த ஆண்டு விதிமுறை தளர்த்தப்பட்டுள்ளது.