உலகிலேயே பெண்களை கார் ஓட்ட அனுமதிக்காத ஒரே நாடு சவுதி அரேபியா. 25 ஆண்டுகளுக்கு மேலாக கார் ஓட்டும் அனுமதிக்காகக் குரல் கொடுத்துவந்த பெண்களுக்கு செப்டம்பர் 26 அன்று பச்சைக்கொடி காட்டியது அந்நாட்டு அரசு. 2018 ஜூனிலிருந்து பெண்களும் இனி அங்கு கார் ஓட்டலாம். அதேபோல, விளையாட்டு மைதானங்களிலும் இனி பார்வையாளர்களாகப் பெண்கள் பங்கேற்கலாம். ஆம், இதற்காகவும்கூட அவர்கள் நீண்டகாலம் குரல் கொடுக்க வேண்டியிருந்தது இந்நாள் வரை!