குறும்படம் (COMMA)
உயர்கல்வி நிலையங்களில் ஜாதி பேதம் மாணவர்களை எவ்வளவு கொடூரமாக பாதித்திருக்கிறது என்பதை ஒரே ஒரு காட்சி மூலமே எல்லாக் கொடுமைகளையும் உணர்த்தி விடுகிறது இந்த 9:55 நிமிடம் ஓடும் குறும்படம். ஜாதியைச் சுட்டிக்காட்டி ஒருவரை தொடர்ந்து இழிவுபடுத்தியதால் மிகுந்த தன்னிரக்கத்திற்கும், துன்பத்திற்கும் ஆளான அந்த மாணவன் தற்கொலைக்குத் துணிந்து அதற்கு முன் கடிதம் எழுதுகிறான். அந்தக் கடிதத்தில் அவன் எழுப்பும் ஜாதி தொடர்பான கேள்விகள் பார்க்கின்ற நம்மையும் பதற வைக்கிறது. இறுதியில் தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிவிடுகிறான். அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை.
‘மாலை வெண்ணிலா பிக்சர்ஸ்’ தயாரிப்பில் இயக்குநர் சூர்யா எழுதி இயக்கியிருக்கிறார். இதை ஹ்ஷீutuதீமீ “, (சிளிவிவிகி)’’- என்ற பெயரில் காணலாம்.
செயலி VOIP
அரபு நாடுகள் உட்பட சில நாடுகள் VolP (Voice over Internet Protocol) சேவையை பாதுகாப்பு காரணங்களுக்காக முடக்கி வைத்துள்ளார்கள். என்னங்க சொல்றது விளங்கலியா, அட சுருக்கமா சொன்ன இந்த whatsapp, skype, vibe போன்ற செயலிகள் மூலமா வாய்ஸ் கால், வீடியோ கால் பண்ணி மணி கணக்கா பேசுறோம் இல்லையா! அதைத்தான் VolPனு புரிந்து கொள்ள முடியாத மாதிரி சொல்லறாங்க. சரி இப்படி கேட்டை மூடினா நாம எப்படி பேசுறதுனு கேட்கறீங்களா? அட இப்போ அந்த நாட்டின் தொலைதொடர்பு நிறுவனமே அங்கீகரிக்கப்பட்ட இரண்டு செயலிகளை VolP சேவைக்காக கொடுத்து இருக்காங்க. அந்த செயலிகள் தான் BOTIM மற்றும் C’ME ‘மாதத்திற்கு 50 அரபு எமிரேட்ஸ் டாலர் செலுத்தி BOTIM செயலியை உபயோகிக்கலாம். Whatsapp போன்ற முன்னணி செயலில் உள்ள அத்தனை வசதிகளும் இந்த செயலிலும் இருக்கிறது. ஒன்றைத் தவிர, டாக்மெண்ட்களை அனுப்பு வசதி மட்டும் இந்த செயலில் இல்லை. இதனை Android and iOS இரண்டிலும் உபயோகிக்க முடியும். வாய்ஸ் மெசேஜ், டெக்ஸ்ட் மெசேஜ், வாய்ஸ் கால், வீடியோ கால் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன. நாம் இருக்கும் இடத்தினையும், காலர் லிஸ்டில் இருக்கும் தொடர்புகளையும்கூட பகிர முடியும். ஒரே குழுவில் அதிகப்பட்சமாக 500 நபர்களை சேர்க்க முடியும். எல்லா வகையிலும் சிறந்த செயலியாக உள்ள இதனை இதுவரை 1 மில்லியனுக்கு மேலான மக்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகிறார்கள். கூடுதல் தகவல் என்னவென்றால் சேவை முடக்கப்பட்ட நாடுகளில் மட்டும் தான் கட்டணம் செலுத்தி உபயோகிக்க வேண்டும். நமக்கு எல்லாம் எந்த கட்டணமும் இல்லீங்க. அன்பிற்கு வானம் கூட எல்லையாகி வேலி போட முடியாத போது, சில ஆயிரம் மைல்கள் தடையாக வர முடியுமா என்ன! உடனே தரவிறக்கம் பண்ணி நெருக்கமானவர்களோடு மனம் விட்டு பேசுங்க.அன்பை பகிருங்க.
https://play.google.com/store/apps/details?id=im.thebot.messenger&hl=en
Improve English: Word Games
இச்செயலி ஆங்கிலத்தில் தன்னம்பிக்கையுடன் உரையாட உதவும். இதில் பாடங்களை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துள்ளனர். இதிலுள்ள விளையாட்டுகள் மூலம் ஆங்கில இலக்கணம், சொற்கள் ஆகியவற்றை எளிதில் கற்றுக்கொள்ளலாம்.
ஆங்கிலத்தில் பல சொற்கள் ஒரே மாதிரியான உச்சரிப்பில் இருக்கும். அவற்றைப் பிரித்தறிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவும். 50 லட்சத்துக்கும் அதிகமான சிறு சிறு பகுதிகளாக பாடங்கள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இந்தச் செயலியில் நான்கு லட்சம் விளையாட்டுகள் பயனர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன.
goo.gl/fpyp1v or http://knudge.me‘
கூர்ப்பி’ (Pencil Sharpner)
பிஞ்சு உள்ளங்களில், ‘என்னால் முடியுமா?’ என்று தோன்றும்போது, ‘முயற்சி செய்; முடியும்!’ என்ற தன்னம்பிக்கையை ஊட்டுங்கள். அவர்களால் சாதிக்க முடியும் என்பதையும் வேறொன்று மூலம் கிடைக்கும் சிறப்பு நிலைக்காது என்ற பாடமும் இதில் காண முடிகிறது. கவித்துவமாகச் சொல்வதுதான் இந்தக் ‘கூர்ப்பி’ குறும்படம்.
பென்சில் சீவும் கருவிக்கு ஒரு தனிச்சிறப்பு இருந்தது போலவும் அந்தச் சிறப்பு போன பிறகு, ‘முகில்’ என்ற பிஞ்சுக்கு சேர்ந்த நண்பர்கள் விலகிப் போனதுபோலவும் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில் பென்சில் சீவும் ‘முகில்’அதில் வெளிப்படும் குப்பைகளைக் கொண்டு தாள், பசை இவைகள் மூலம் பல்வேறு உருவங்களைச் செய்து அசத்துகிறாள். இழந்த தன்னம்பிக்கையை தன் சொந்தத் திறன் மூலமே ‘முகில்’ பெறுவது போல கதை முடிகிறது.அரசுப் பள்ளி மாணவர்களைக் கொண்டு சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த ‘கூர்ப்பி’ 18:04 நிமிடங்கள் ஓடுகிறது. சொல்லவேண்டிய கருத்தை எம்.வெங்கடேசன் எழுதி சிறப்பாக இயக்கியிருக்கிறார். இதை சீஷீutuதீமீ-இல் காணலாம்.
நூல் அறிமுகம்
நூல்: மல்லிகைப் பூ (சிறுகதைகள்)
ஆசிரியர்: ஞா.சிவகாமி
பக்கங்கள்: 126
நன்கொடை: 50/-
வெளியீடு: பூம்புகார் பதிப்பகம்
‘மல்லிகைப் பூ’ என்ற தலைப்பில் 25 சிறுகதைகளை தொகுத்து மணம் வீசும் மலர்ச்சரமாக வாசகர்களுக்கு வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ஓய்வு பெற்ற தலைமைச் செயலக அதிகாரியான திருமதி ஞா.சிவகாமி அவர்கள், தமிழின் மீதும் பெண்கள் மீதும் மிகவும் ஈடுபாடு உடையவர். இத்தொகுப்பில் வரும் எல்லாச் சிறுகதைகளும் பெண்ணின் பெருமைகளை மிகச் சிறப்பாய் பேசுகின்றன. சில கதைகளில் தமிழின் பெருமைகளையும் தமிழரின் உயர்வுகளையும் சிறப்பாய் சொல்லியிருக்கிறார். சாதி மறுப்புத் திருமணத்தின் அவசியம், ஆணவக் கொலைகளின் அவலம், விதவையின் வேதனை, கல்லாத பெண்ணின் கயமை நிலை போன்றவற்றையும் சிறப்பாய் எடுத்துக் கூறியிருக்கிறார். நூல் நெடுக பெரியாரின் கொள்கைகளை ஆழமாய்ப் பதித்துள்ளார். பெண்கள் இந்நூலைப் படிக்கும்போது, நேர்மறையான எண்ணங்களையும் வாழ்வில் உயர வேண்டுமென்ற உத்வேகத்தையும் பெறுவர் என்பது உறுதி! சிறுகதைகளுக்கே உரிய எளிமை, கருத்தில் வலிமை இவையே இந்நூலின் வெற்றி! படித்துப் பயன்பெற வேண்டிய நூல்.