நீருக்கு நிறம் கிடையாது. ஆனால், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ‘லேக் ஹில்லியர்’’ (Lake Hillier) ஏரியானது இயற்கையாகவே ரோஸ் நிறத்தில் இருக்கிறது. இது, எல்லாக் காலநிலை களிலும், இதே நிறத்தில்தான் இருக்கிறது. இதிலுள்ள தண்ணீரை வெளியேற்றினாலும் ‘பிங்க்‘ நிறம் மாறுவதில்லை. ‘துனாலியல்லா சலினா’ (Dunaliella Salina) எனப்படும் உப்பு நீரூற்றுப் பாசிகள் இந்த ஏரியில் உண்டு. இந்த நுண்ணுயிர்களே சூரியன் ஓளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றன. அதனால், ரோஸ் மில்க் போன்று தண்ணீர் காட்சி அளிக்கிறது. இந்த ‘ரோஸ் மில்க்‘ ஏரியைப் பார்த்து ரசிக்கலாம்; குடிக்க முடியாது.
இந்த ஏரி ஆஸ்திரேலியாவில் இருப்பதால் அங்குள்ள மக்கள் அறிவியல் கண்கொண்டு சாதாரணமாகப் பார்த்து மகிழ்கிறார்கள். அங்கு இது ஆச்சர்யத்துக்கு இடமில்லை. இதுவே இந்தியாவில் இருந்திருந்தால் புராணப் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆக்ரோஷமாக இருந்த காளி கோவம் தணிய இந்த ஏரியில் குளித்ததால்தான் சிவப்பு நிறம் பெற்றது என்று கதை அளந்திருந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.