ஓர் ஆண்டினை வடபுலம், தென்புலம் என இரண்டு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.
வடபுலம் (உத்தராயன்) – தை முதல் ஆறு மாதங்கள் பகற்பொழுது அதிகம்.
தென்புலம் (தட்சிணாயனம்) -ஆடி முதல் ஆறு மாதங்கள் இராப்பொழுது அதிகம்.
இதனை ஒளிப்பக்கம், இருட்பக்கம் என்பர். ஒளி – அறிவுடைமை, ஞானம்; இருள்-அறியாமை, அஞ்ஞானம்; ஒளி- சுவர்க்கம்; இருள் – நரகம்.
இருளினின்றும் நாம் ஒளிக்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானத்தினின்றும் ஞானத்திற்குச் செல்ல வேண்டும். அஞ்ஞானம் நீங்கி ஞானம் உதிக்க வேண்டும். அறியாமை அகன்று அறிவுடைமை வரவேண்டும். எனவே, அறிவுடைமைக்குச் சான்றாக விளங்கும் ஒளிப்பக்கத் தொடக்க நாள், தை மாதத் தொடக்க நாளே!
இதனை வலியுறுத்தியவர் வள்ளலார். “புரட்சித் துறவி வள்ளலார்’’ எனும் நூலில் இக்கருத்து விளக்கப்பட்டுள்ளது.
“தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம்’’ உலகப் பரிந்துரை மாநாடு, கோலாலம்பூர், 6.1.2001.