இந்தியாவின் கிராமப்புற இளைஞர்களைப் பற்றி ‘பிரதம்’ என்னும் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் ஜனவரி 16 அன்று வெளியிடப்பட்டது. ‘2017ஆம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கை’ (கிஷிணிஸி) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ‘36 சதவீதக் கிராமப்புற இளைஞர்களுக்கு இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பது தெரியவில்லை என்பது தெரியவந்தது. 14 சதவீதக் கிராமப்புற இளைஞர்களால் இந்தியாவின் வரைபடத்தை அடையாளம் காண முடியவில்லை. 25 சதவீத இளைஞர்களால் தங்களுடைய தாய்மொழியில் அடிப்படையான வாக்கியங்களைச் சரளமாக வாசிக்க முடியவில்லை.
நாட்டின் கிராமப்புற மாவட்டங்களைச் சேர்ந்த 14 வயதிலிருந்து 18 வயதுவரை உள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.