பா.ஜ.க. ஆளும் இராஜஸ்தான் மாநில அரசின் கல்வியமைச்சர் வாசுதேவ் தேவ்நானி அவர்கள் பசுக்கள் பிராணவாயுவையே உள்ளிழுத்து பிராணவாயுவையே வெளிவிடுகின்றன என்று உண்மைக்குப் புறம்பான, அறிவுக்குப் பொருந்தாத, விஞ்ஞானத்திற்கு ஒவ்வாத கருத்தை வெளியிட்டுள்ளார். சுவாசித்தல் என்பதே பிராணவாயுவை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியிடுவதுதானே! அதுதானே விலங்குகளின் இயக்கம். இதுகூடப் புரியாது அல்லது புரிந்தும் புரியாதது போல் நடித்து தங்கள் கோமாதாவுக்கு எந்த உயிருக்கும் இல்லா சிறப்பியல்பு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக உளறிக் கொட்டுகின்ற இவர்களெல்லாம் கல்விஅமைச்சர்கள் என்றால் அம்மாநிலக் கல்வித் துறையை யார் காப்பது?