நூல்: ‘அறிஞர்கள் பார்வையில் ஜோதிடம்’ தொகுப்பாசிரியர்: கி.வீரமணி
பக்கங்கள்:96 நன்கொடை: ரூ.60/-
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, 84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல், வேப்பேரி, சென்னை_7.
படிக்காதவர்களையும் படித்தவர்களையும் ஒரு சேர முட்டாளாக்கும் ஜோதிட மூடநம்பிக்கையை தோலுரிக்கும் கட்டுரைகளின் தொகுப்பு. தந்தை பெரியார் ஜோதிடம் பற்றி எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை மற்றும் சித்திரபுத்திரன் பெயரில் எழுதிய உரையாடல், நோபல் பரிசு பெற்ற 19 அறிஞர்கள் ஜோதிடத்திற்கு எதிராக தந்த கூட்டறிக்கை, ஜோதிடம், சகுணம் போன்ற மூடநம்பிக்கைகள் குறித்த அறிஞர் ஜி.டி.நாயுடு அவர்களின் ஆராய்ச்சி உரை, வானியலையும், ஜோதிடத்தையும் ஒப்பிட்டு சு.மகாதேவன் அவர்கள் ஆற்றிய ஆராய்ச்சி உரை மற்றும் ‘சுப்புவிற்கு ஏழரை நாட்டு சனி’ என்னும் சிறுகதை, மங்கோதார் எழுதிய ‘அரசியலும் ஜோதிடமும்’ ஆராய்ச்சி கட்டுரை, கைரேகை சாஸ்திரம், இராசியியல், ஜெபம் உள்ளிட்ட மோசடிகளை விளக்கும் டாக்டர் கோவூர் அவர்களின் அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய அனைவரும் படிக்க வேண்டிய தொகுப்பு.