கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் நவம்பர் 18, (1936).
இந்திய விடுதலைப் போராட்டத்தில் வ.உ.சி.யின் தியாகத்திற்கு இணையாக தராசுத் தட்டில் எதிர்த்தட்டில் நிறுத்தி வைக்க இன்னொருவர் இல்லை. இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டு இரட்டை ஆயுள் தண்டனைப் பெற்றவர்.
கப்பல் நிறுவன உரிமையாளரான இவர் சிறைக்குள் செக்கு இழுத்தவர், கல் உடைத்தவர். ஆனால், இந்த தியாகத்திற்கான பெருமையை அவர் பார்ப்பனரல்லாதவர் என்ற காரணத்தினாலாயே இந்த நாடு வழங்க மறந்துவிட்டது. வ.உ.சி அவர்கள் தந்தை பெரியாரிடத்திலும், சுயமரியாதை இயக்கத்தினரிடமும் மிகுந்த மதிப்பும் ஈடுபாடும் கொண்டவராகத் திகழ்ந்தார். தந்தை பெரியாருடன் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். தமிழ் இலக்கிய உலகிற்கும் தமது பங்களிப்பை வழங்கிடத் தவறவில்லை.