மதவெறி மாய்த்து மனிதம் காப்போம்!

நவம்பர் 16-30

 மதத்தை ஏற்றி
மனிதம் மாய்த்திடும்
மதவெறி ஆட்சியில்
நிதம்நிதம் வேதனை!
மக்கள் பயன்பெற
மதமே செய்ததென்?
பயமே இன்றிப்
பாதகம் செய்திட
பயிற்றும் கூடமாய்
மதங்கள் மாறின!

சிலுவைப் போர்முதல்
சிரியாப் போர்வரை
உலகில் நடந்த
உயிர்பலி போர்கள்
மதத்தின் கொடையே
மறுக்க முடியுமா?

அய்யா வழியில்
மதத்தை ஒழித்து
மடமை தகர்த்து
ஜாதி ஒழித்து
சமத்துவம் பேணி
அறிவில் உயர்ந்து
ஆற்றல் வளர்த்து
மான வாழ்வை
மகிழ்வாய் வாழ்வோம்!

-வடபாதியான்

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *