பேராசிரியர் நன்னன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்
பிறந்த காலம்: 16.7.1924
பிறந்த இடம்: கடலூர் மாவட்டக் காவனூர்
பெற்றோர்: மீனாட்சி, மாணிக்கம்
வாழ்க்கைத் துணைவர்: ந.பார்வதி
மக்கள்: 1. வேண்மாள், 2. அண்ணல், 3.அவ்வை
கல்வி: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சிச் சான்றும், எம்.ஏ; பி.எச்.டி; ஆகிய பட்டங்களும்.
கொள்கை: அறிவும் தெளிவும் பெறாத இளமையில் ஆத்திகம்; பக்குவம் பெற்றபின் முழுப் பகுத்தறிவுக் கோட்பாடு (நாத்திகம்).
பணி: தொடக்கக் கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வியீறாக உள்ள எல்லா நிலைகளிலும் _ ஆசிரியர் பயிற்சி, ஆட்சி மொழிப் பயிற்சி, பிற மொழியாளர் கல்வி, வயது வந்தோர் கல்வியுட்பட _ பங்குண்டு.
தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராகச் சிறப்புடன் பணியாற்றியுள்ளார்.
பாடத் திட்டக்குழு, பாட நூற்குழு, பாடநூல் வல்லுநர் குழு, இடைநிலைக் கல்வி வாரியம், வயது வந்தோர் கல்வி வாரியம் ஆகியவற்றில் தொடர்பும், தலைமையும் தவிரப் பல்கலைக்கழக ஆட்சிக்குழு போன்ற வேறு சில சிறப்புக் குழுக்களிலும் தொடர்புண்டு.
பேச்சு: 1942ஆம் ஆண்டு முதல் கல்வியியல், சமூகவியல், அரசியல், இலக்கியவியல், தொழிலாளரியல் ஆகியவை குறித்த பல மேடைகளிலும் உரையாற்றியமை.
விருப்பம்: பொதுவாகக் கற்பித்தல் _ சிறப்பாக இலக்கணங் கற்பித்தல், நடிப்பு.
எழுத்து: பல பாட நூல்கள், துணைப்பாட நூல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், மாதுளை, அறத்தின் வித்து, சுயசிந்தனையாளர் பெரியார், வழுக்குத் தமிழ்.
பெரியாரியல்: 1. பொருள், 2.மொழி, 3.இலக்கியம், 4.கலை, 5.தாம், பெரியார் கணினி போன்ற பற்பல நூல்கள்.
சிறப்புப் பணி: சென்னைத் தொலைக்காட்சியின் வாழ்க்கைக் கல்வி எனும் பகுதியில் பதினாறு ஆண்டுகளுக்கு மேல் எண்ணும் எழுத்தும் கற்பித்தமையும், உங்களுக்காக எனும் பகுதியில் அய்ம்பதுக்கும் மேற்பட்ட குறு நாடகங்களை எழுதி, இயக்கி, நடித்தமையும். அரசுப் பணியின் இறுதியில் கற்பிக்கும் பணியிலிருந்து நிருவாகப் பணிக்கு மாற்றப்பட்டுத் தமிழ் வளர்ச்சி இயக்குநராகப் பணிபுரிந்து இதுவரைகூட யாரும் எட்டமுடியாத சாதனை படைத்தமையும், ‘நன்னன்முறை’ எனும் கற்பிக்கும் முறையைத் தோற்றுவித்து அதற்குரிய பாடநூல், கற்பிக்கும் முறை ஆகியவற்றை உருவாக்கிப் பயிற்சி தந்து நடைமுறைப் படுத்திக் காட்டியமையும்.
சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு ஆண்டுதோறும் பரிசுத் தொகைக் கொடுத்து ஊக்குவித்தார்.
போராட்டம்: 1949இல் வெள்ளையனே வெளியேறு எனும் போரிலும், திராவிட இயக்க உணர்வு பெற்ற பின் தமிழிசைக் கிளர்ச்சி, இந்தி எதிர்ப்புப் போர் ஆகிய போர்களிலும் பங்கு பற்றியமை. தொடர்வண்டி நிலையப் பலகைகளில் உள்ள இந்தி எழுத்துகளை அழிக்கும் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றமை.