இந்தியாவில் 2015ஆம் ஆண்டில் 25 லட்சம் பேர் சுற்றுச்சூழல் பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர் என்று 19.10.2017இல் வெளியிடப்பட்ட “லான்செட் மருத்துவ இதழில், செய்தி வெளியாகியுள்ளது. இதில் காற்று மாசுபாட்டினால் 10 இலட்சத்து 80 ஆயிரம் பேரும், தண்ணீர் மாசுபாட்டினால் 64 ஆயிரம் பேரும் வேலைசெய்யும் இடத்தில் ஏற்படும் மாசு பாதிப்பால் 16 ஆயிரம் பேரும், மண் மற்றும் ஈய மாசுபாடு தாக்குதலால் 95,843 பேரும், வீட்டில் ஏற்படுகின்ற காற்று தண்ணீர் மாசுபாட்டினால் 10,50,000 (பத்து லட்சத்து அய்ம்பதாயிரம்) பேரும் மற்ற மாசுபாட்டினால் 10,30,000 (பத்து இலட்சத்து 30 ஆயிரம்) பேரும் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கிறது.
உலக அளவில் சுற்றுச் சூழல் பாதிப்பால் ஏற்படுகின்ற மரணங்களில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.
உலக அளவில் ஏற்படுகின்ற 90 இலட்சம் சுற்றுச் சூழல் பாதிப்பு மரணங்களில் இந்தியாவில் 24.45% சைனா, 19.50%, பாகிஸ்தான் 21.93%, வங்காளதேசம் 26.57%, மடகாஸ்கர் 22.28%, கென்யா 19.26% என அந்த ஏடு புள்ளிவிவரம் அளித்துள்ளது.
தொற்றுத்தன்மை இல்லா நோய்களால் இறப்போர் மொத்த இறப்பில் 60% எனில் அதில் 26% சுவாசக் கோளாறு நோய்களால் மட்டுமே ஏற்படுவதாக மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவிக்கிறது. எனவே, சுற்றுச்சூழல் சீர் செய்வதில் மத்திய, மாநில அரசுகள் தக்க கவனம் செலுத்த வேண்டியது அவசிய, அவசரத் தேவையாகும்.